என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைப்படம்"

    • அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    • திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.

    கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார். 

    • பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
    • உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.

    பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.

    2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.

    இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
    • சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.

    G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".

    இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.

    ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.

    இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    • என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.
    • அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை.

    தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

    அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

    ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா,

    நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...

    சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

    செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.
    • திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது

    கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் 'நாங்கள்'

    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய 'நாங்கள்' திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

    பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு.

     அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும்  கையாண்டுள்ளார்.

     

    'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' மற்றும் 'அழகு குட்டி செல்லம்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த வேத் ஷங்கர் சுகவனம் 'நாங்கள்' படத்திற்கு இசையமைத்துள்ளார். லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.

    'நாங்கள்' திரைப்படம், ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'இஎம்ஐ - மாதத் தவணை'.
    • படத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'இஎம்ஐ - மாதத் தவணை'.

    நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே சுந்தர், மனோகர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்திற்கு ஸ்ரீநாத் பிச்சை இசையமைத்துள்ளார். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் பேரரசு, விவேக் எழுதியுள்ளனர்.

    இஎம்ஐ படத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் (sneak peek) வெளியிடப்பட்டுள்ளது.

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
    • நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.

    காங்கயம்:

    தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஆா்.பாா்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. 'நான் லீனியா் சிங்கிள் ஷாட்' படம் என்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.இந்தப் படத்துக்கு ஆா்.பாா்த்திபன் கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தாா்.காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது.நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகா்மன்ற துணைத் தலைவா்கமலவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் ஆா்.பாா்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது குறித்த தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் இயக்குநா் ஆா்.பாா்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கை மனு மீதான உள்ளாட்சி நகா்மன்றங்களின் முடிவினை அனுப்பிவைக்குமாறு சென்னை நகராட்சி இயக்குநா் கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா்.இதையடுத்து, நடைபெற்ற காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு அளித்து ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

    • அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.
    • பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார்.

    அனுப்பர்பாளையம் : 

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருப்பூரை சேர்ந்த சஞ்சய் மணிகண்டன் என்பவர்இயக்கத்தில்,இசையமைப்பாளர் குட்லக் ரவி இசையில் தயாரிக்கப்பட்டுள்ள "ஸ்ரீராஜ மணிகண்டன்" என்ற அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. ஆன்மீக மேம்பாட்டு தலைவர், எம்.எஸ்.நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ,செயலாளர் பழனியப்பன், குமார பாலா பவுண்டேஷன் சேர்மன் சதீஷ்குமார்,பூண்டி நகர தலைவர் ஜெயப்பிரகாஷ்மற்றும் திரைப்பட நடிகர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    தஞ்சாவூர்:

    பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.

    அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான்.

    இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர், திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் த.மு.மு.க. வலியுறுத்தியது.
    • பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பனைக் குளம் த.மு.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் முகவை சலிமுல்லாகான், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சுலை மான், நகர் தலைவர் முகமது அமீன், நகர் செயலாளர் முகமது தமீம், நகர் துணை செயலாளர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் நகரில் உள்ள தியேட்டர்களின் உரிமையா ளர்களிடம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியிடுவதை மறுபரி சீலனை செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' , புர்கா, பர்கானா ஆகிய திரைப்படங் கள் தமிழகத்தில் ஒற்றுமை யாக வாழக்கூடிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களி டையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

    இல்லாத ஒன்றை உருவாக்கி இந்த திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரி வினையை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. எனவே இந்த திரைப்படத்தை திரை யிடாமல் மதநல்லிணக்க ஒற்றுமைக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    திருப்பூர் :

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடக் கோரி இந்திய ஜனநாயக பேரவை அறக்கட்டளை சாா்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து அறக்கட்டளையின் மாநில இளைஞரணித் தலைவா் ஏ.அம்ஜித் அசோக், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியள்ளதாவது:- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    இந்த திரைப்படத்தின் மூலமாக அனைத்து பெண்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படும். ஆகவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×