என் மலர்
நீங்கள் தேடியது "ரிலீஸ் தேதி"
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- பராசக்தி படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
- பராசக்தி படத்தில் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பராசக்தி திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு றிவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
- மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ”.
- இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A.அழகு பாண்டியன்.
ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "நறுவீ". இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A.அழகு பாண்டியன்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி, கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாரக் M.
மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் சென்னை ஊட்டி குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் படக்குழு பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது.
எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மூலம் சிறப்பான இசையை தந்த அஸ்வத், நறுவீ திரைப்படத்திற்கு சிறப்பான இசை பங்களிப்பு செய்திருக்கிறார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகமெங்கும் திரையரங்க வெளியீடு பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டூடியோஸ்.
தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து, இயக்கம் : சுபாரக் M
தயாரிப்பு நிறுவனம் : ஹரிஷ் சினிமாஸ்
தயாரிப்பு: அழகு பாண்டியன்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு : ஆனந்த் ராஜேந்திரன்
படத்தொகுப்பு : சுர்பார்க் M
கலை: C K சத்திவேல்
பாடல் வரிகள்: புகழேந்தி கோபால், சங்கவி GV
ஆடியோகிராபி: ராயல் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு: ராயல் ஸ்டுடியோ
DI: ராயல் ஸ்டுடியோ
வண்ணம்: கோகுல்
ஆடை வடிவமைப்பாளர்: பிரியா
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : வினோத்குமார் டைட்டில் & விளம்பர வடிவமைப்பு : ராஜு
ஸ்டில்ஸ் : ஆனந்த் ராஜ்
மக்கள் தொடர்பு : மணி மதன்
- கிங்டம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
- கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்படத்திற்கான இசையமைப்பு மற்றும் பின்னணி இசை என அனைத்து பணிகளையும் முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், கிங்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, கிங்டம் திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதிக்கான ப்ரோமோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
- ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.
"ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.
ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
- 'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என டைட்டில் டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
- அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'
- இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கிறார்.
பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார்.
நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
- லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.
- திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது
கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் 'நாங்கள்'
சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய 'நாங்கள்' திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு.

அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' மற்றும் 'அழகு குட்டி செல்லம்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த வேத் ஷங்கர் சுகவனம் 'நாங்கள்' படத்திற்கு இசையமைத்துள்ளார். லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.
'நாங்கள்' திரைப்படம், ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

- மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
- ம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
- விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.
விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தங்கலான் படம் வரும் 26-ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
- லவ்வர், கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.
இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இளைஞர்கள் மனதில் நின்றது.
இந்நிலையில், லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லவ்வர் திரைப்படம் மார்ச் மாதம் வரும் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







