கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கென் கருணாஸ் இயக்கி வந்த யூத் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யூத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் கதநாயகைகளாகவும், சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'யூத்' திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com