என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thaman"

    • ’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
    • இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஒரு நொடி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் 'ஜென்ம நட்சத்திரம்' படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன்  இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    நடிகர் தமன், "'எக்ஸோர்சிஸ்ட்', 'ஓமன்', 'போல்டர்ஜிஸ்ட்' மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் கிட்டத்தட்ட 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். எப்படி 'ஒரு நொடி' படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவும் குடும்பம் போல பழகியிருக்கிறோம். எங்களை வாழ்த்தும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். 'ஒரு நொடி' படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். 'ஒரு நொடி' படம் பார்த்தப் பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய் சாருடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி!"

    இயக்குநர் மணிவர்மன், "'ஒரு நொடி' படம் பார்த்த பிறகு விஜயன் சார்தான் 'ஜென்ம நட்சத்திரம்' படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நடந்திருக்காது. தயாரிப்பாளர் சுபாஷினி மேம் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை" என்றார்.

    • "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
    • ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது.
    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது.

    திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர்  திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது.

    படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது.

    படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், "முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.  இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

    • ’வாரிசு’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ இன்று வெளியாகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    வாரிசு

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் 'ரஞ்சிதமே' பாடல் புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்தது.. இந்நிலையில், இசையமைப்பாளர் தமனின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    விஜய் - தமன்

    இன்று மாலை 5.30 மணிக்கு 'வாரிசு' படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' வெளியாகவுள்ள நிலையில் தமனின் இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் யூட்டியூப்பில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    வாரிசு

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் ௨௬ மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, 1994-ஆம் ஆண்டு வெளியான 'உளவாளி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டுக்களை கொண்டு 'ரஞ்சிதமே' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமனின் சில பாடல்கள் இவ்வாறு வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘வாத்தி’.
    • ’வாத்தி’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    ஜிவி பிரகாஷ் குமார்

    ஜிவி பிரகாஷ் குமார்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரின்ஸ், வாரிசு உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தமன், வாத்தி படத்தின் பாடல்களுக்காக ஜிவிபிரகாஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ். வாத்தி மற்றும் சார் படத்திற்கு முன்கூட்டியே வாழ்த்துகள். அடுத்த முறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

    • இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

    இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா பல மொழியில் அதிக படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் நயன்தராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படங்களை துவங்கும் நிலைமை உள்ளது. இவர் தற்போது 'இறைவன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் இந்தியில் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார்.


    நயன்தாரா 75 போஸ்டர்

    இதைத்தொடர்ந்து நயன்தாராவின் 75-வது படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாராவின் 75-வது படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
    • இவருடைய மறைவுக்கு துல்கர் சல்மான், செல்வராகவன், தமன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


    மனோபாலா

    மனோபாலா

    இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் துலகர் சல்மான் பதிவிட்டிருப்பது, நீங்கள் எப்பொழுதும் அன்பானவர், பன்பானவர், எங்களை சந்தோஷமாக வைத்து கொள்ளக்கூடியவர். நாம் படத்தில் ஒன்றாக நடித்த பொழுது இனிமையான நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ளது.


    இசையமைப்பாளர் தமன், உண்மையிலேயே நல்ல மனிதர். அவருடைய மறைவு செய்தி உலுக்குகிறது.

    இயக்குனர் செல்வராகன், எப்பொழுதும் என்னுடைய இனிய நண்பர்.

    இயக்குனர் பாண்டியராஜ், மிஸ் யூ மனோபாலா சார், என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
    • நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டுள்ளார்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9 தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


    இந்த சீசனில் ஒளிபரப்பான எபிஸோடில், நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால், அனைவரையும் அசர வைத்தார். கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீ உடைய கதையை கேட்டு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


    இதே நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

    எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் வாய்ப்பை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு பெரும் மாற்றத்தை, வாய்ப்பை வழங்கும், இசையமைப்பாளார் தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

    • சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
    • போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி அசத்தி வருகிறார் தமன்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் நடுவராக இசையமைப்பாளர் தமன் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும், கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நடுவர்கள் போல் இல்லாமல், போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது, சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது என அசத்தி வருகிறார் தமன்.


    இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

    கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா ஆகிய இரு பாடகர்கள் "ஊர்வசி ஊர்வசி" பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன். கவுரவ் எனும் பாடகர் "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார்.


    இதுமட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஆண்டனி தாஸ், தமனிடம் வாய்ப்புக் கேட்க அவருக்கு ஒரு புதிய தெலுங்குப் படத்தில் பாடல் வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

    தமன் நடுவராக இல்லாமல் அனைவருடனும் மிக சகஜமாக பழகி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது  ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்து கொண்டார்.


    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.
    • இந்த பிரிவுகளிலிருந்து பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார்.


    சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா, என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் தந்தையை போல் பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார்.



    இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார். அதில், ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என் தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம் "நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது" என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார். இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது.

    • சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
    • சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



    இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிசோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.



    எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.


    நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாகவே தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.

    தமன் 'இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார்' என்றும் பாராட்டினார். நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது.

    ×