என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jenma Natchathiram"

    • "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
    • படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

    "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். 

    இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    • ’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
    • இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஒரு நொடி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் 'ஜென்ம நட்சத்திரம்' படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன்  இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    நடிகர் தமன், "'எக்ஸோர்சிஸ்ட்', 'ஓமன்', 'போல்டர்ஜிஸ்ட்' மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் கிட்டத்தட்ட 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். எப்படி 'ஒரு நொடி' படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவும் குடும்பம் போல பழகியிருக்கிறோம். எங்களை வாழ்த்தும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். 'ஒரு நொடி' படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். 'ஒரு நொடி' படம் பார்த்தப் பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய் சாருடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி!"

    இயக்குநர் மணிவர்மன், "'ஒரு நொடி' படம் பார்த்த பிறகு விஜயன் சார்தான் 'ஜென்ம நட்சத்திரம்' படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நடந்திருக்காது. தயாரிப்பாளர் சுபாஷினி மேம் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை" என்றார்.

    • "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
    • ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
    • ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார்.

    "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது.

    படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டது.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர்.

    ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

    இந்நிலையில், ஜென்ம நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    • படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது.
    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது.

    திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர்  திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது.

    படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது.

    படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், "முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார்.

    ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.  இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

    • ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

    ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.

    அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

    அனைத்துவித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திர தினமாகும்.

    ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.

    ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இதுதான்.

    எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.

    ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.

    ஜென்ம நட்சத்திர வழிப்பாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது.

    தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

    ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது.

    வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.

    ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.

    ×