என் மலர்
நீங்கள் தேடியது "டீசர்"
- மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரின் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் இணைந்து பாக்கெட் நாவல் படத்தில் நடித்துவருகிறார்
ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'. விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' மூலம் இதைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து கதை நகர்வதுபோல் டீசரில் காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இரட்டை வேடங்களில் நடித்துள்ளரா எனத் தோன்றுகிறது. வெப் சீரிஸ் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் இணைந்து பாக்கெட் நாவல் படத்தில் நடித்துவருகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்தில் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
- படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
- டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார்.
- பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.
இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் படமான '4 விண்டோஸ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ் , சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், சரண், வையாபுரி, டிஎம் கார்த்திக், ஸ்ரீநிக்தா, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். டீசரை பார்க்கும்போது ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே சுழல்கிறது என்ற தோற்றத்தை அளிக்கிறது.
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.
வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.
- ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம்.
- ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இந்தியில் முன்னணி இயக்குநர் விஷால் பரத்வாஜ். ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம். ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இவர் தற்போது ஓ' ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த புதிய படத்தை ஃபேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் அறிவிப்பு நேற்று வீடியோவாக வெளியானது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 9வது படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு தாய் கிழவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.
இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் டீசரை நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு "வித் லவ்" என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்,"என் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் WithLove படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தில்தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு "DC" என பெயரிடப்பட்டுள்ளது.
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி டீசருடன், வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில்,"ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மைலாஞ்சி'.
திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:-
நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு.
இவ்வாறு கூறினார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொம்புசீவி படத்தின் டீசர் இன்று மாலை வௌியானது.






