search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toxic"

    • யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
    • யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

    யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.

    யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார்.  கரீனா கபூர்  டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
    • யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை.

    சென்னை பெருங்குடியில் குடிநீர் உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    கிணற்றில் சுத்தம்செய்து கொண்டிருந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்ற சரவணனும் பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    லண்டன்:

    கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி செய்தி வெளியிட்டுள்ளது.

    டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வேதிப்பொருட்கள் கலந்த 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChemicalMixedFish #Kerala
    ×