என் மலர்
நீங்கள் தேடியது "Ranveer Singh"
- படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்
- நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன்
ரிஷப் ஷெட்டி எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் தென்னியந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் அடுத்து இதன் தொடர்ச்சியாக 'காந்தாரா சாப்டர் 1' எடுக்கப்பட்டது. இதனையும் ரிஷப் ஷெட்டியே நடித்து, இயக்கியிருந்தார். இப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி உட்பட பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்துகொண்டார். விழாவில் ரன்வீர் சிங் காந்தாரா குறித்து பேசியிருந்தார்.
அப்போது, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங் அதுபோல நடித்தும் காட்டினார். இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் ரன்வீர் சிங். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,
"படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஒரு நடிகராக அந்த குறிப்பிட்ட காட்சியை நடிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனை கச்சிதமாக செய்த அவரை போற்றுகிறேன். நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன். நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
- சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். மும்பையில் பிறந்த இவர் கடந்த 2011-ம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் சாரா அர்ஜூன்.
'தெய்வத் திருமகள்' திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம்வயது நந்தினியாக ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா என பெரிய நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள 'துரந்தர்' படத்தில் சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 5-ந்தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் மும்பையில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சாரா அர்ஜூனும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'துரந்தர்' படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் 40 வயதான ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார். அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சாரா அர்ஜூனுக்கு 20 வயது தான். தன்னை விட 20 வயது மூத்த பாலிவுட் நடிகருடன் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
- தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.
விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.
அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.
இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேத்ரா மண்டேனா - வம்சி காடிராஜு ஜோடிக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
- இந்த திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் பத்மஜா மற்றும் ராம ராஜு மண்டேனாவின் மகள் நேத்ரா மண்டேனாவுக்கும் சூப்பர் ஆர்டரின் இணை நிறுவனர் வம்சி காடிராஜுக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில், பல்வேறு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், டிரம்ப் ஜூனியர், ஜான்வி கபூர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் நடனமாடினர். இந்த கலை நிகழ்ச்சிகளை திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.
- அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
- தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கடந்தாண்டு கர்ப்பமானார். செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டினர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
- இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.
இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.
116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.
- பவன் கல்யாணின் ‘ஓ.ஜி.' படத்தில் நடித்துள்ளார்.
- பிரபு சாலமனின் ‘கும்கி-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'பாம்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் 'ஓ.ஜி.' படத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் 'கும்கி-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் தற்போது பாலிவுட் சினிமாவில் களமிறங்க போகிறார். பர்ஹான் அக்தர் இயக்கத்தில் 'டான்-3' படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க போகிறாராம். விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 600 பேர் உணவை உண்டதாகவும், அவர்களில் 120 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துரந்தர்' (Dhurandhar).
இதன் படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட மத்திய உணவை உண்ட சுமார் 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு Food Poison ஆகி, வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். .
சுமார் 600 பேர் உணவை உண்டதாகவும், அவர்களில் 120 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உணவின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகள் வெளியான பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார்.
- ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் இசையை சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
- இவர் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரலாற்று நாவல்களை தேடிப்பிடித்து படிக்க தொடங்கி உள்ளனர்.

ரன்வீர் சிங்
இந்நிலையில் வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.






