என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    VIDEO: காந்தாரா காட்சியை நடித்த ரன்வீர் சிங்.. தெய்வத்தை கேலி செய்வதாக சர்ச்சை
    X

    VIDEO: காந்தாரா காட்சியை நடித்த ரன்வீர் சிங்.. தெய்வத்தை கேலி செய்வதாக சர்ச்சை

    • ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.

    விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.

    அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

    இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×