என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தாரா"

    பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.

    இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்கிற்கு எதிராக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், ரன்வீர் சிங்கிற்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அரசு மற்றும் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    • படத்தின் தெய்வீகக் கதாபாத்திரமான 'தைவா' (Daiva) போலச் செய்து காட்டினார்.
    • இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

    கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.

    இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

    இதனிடையே இது கடலோர கர்நாடகாவின் புனிதமான 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தல் என்பவர் ரன்வீர் சிங்மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல் (பிரிவு 299) மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் (பிரிவு 196) உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தன்மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் ரன்வீர் சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

    அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜை செய்தனர்.

    2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

    இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

    'ஜெய் ஹனுமான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஹனுமானாக நடிக்க உள்ளார்.

    'ஜெய் ஹனுமான்' படத்தை, கடந்த 2024 இல் 'ஹனுமான்' என்ற படத்தை எடுத்து கவனம் பெற்ற தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார். உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

    கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே, அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் நேற்று ஜெய் ஹனுமான் படக்குழு சிறப்பு பூஜை செய்து படப்பிடிப்பை தொடங்கியது.

    இதில் ரிஷப் ஷெட்டி தனது மனைவி பிரகதி ஷெட்டியுடன் கலந்து கொண்டார். இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். கௌரா ஹரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.   

    உலகளவில் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

    இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' அதே அளவு கதை இல்லையென்றாலும் பிரமாண்டத்தில் குறை வைக்கவில்லை. ஹாலிவுட் தரத்திலான VFX காட்சிகள் பிரமிக்க வைத்தன.

    இந்தப் படம், உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் 'காந்தாரா சாப்டர் 1' இடம்பெற்றுள்ளது.

    ஆஸ்கர் அகாடமி விதித்துள்ள தகுதி வரம்புகளை இந்தப் படம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.

    இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2022 வெளியான காந்தாரா படமும் அப்போதைய ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றது. அனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. 

    98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் 'காந்தாரா சாப்டர் 1' இறுதிப்  பட்டியலுக்குள் நுழையுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    • இந்தாண்டு இதுவரை எந்த படமும் ரூ.1000 கோடி வசூலை அடையவில்லை
    • சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பல படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.

    ஒருகாலகட்டத்தில் பாலிவுட் படங்கள் மட்டுமே பெரும் வசூல் குவித்து வந்த நிலையில், அதற்கு போட்டியாக டோலிவுட், கோலிவுட் படங்களும் வசூலை வாரிக்குவித்தன. இந்த வசூல் போட்டியில் தற்போது சாண்டல்வுட், மோலிவுட் படங்களும் வரிசை கட்டி வரத்தொடங்கியுள்ளன.

    பாகுபலி படத்திற்கு பின்பு உருவான பான் இந்தியா படம் என்ற கான்செப்டில் பல தென்னிந்திய படங்கள் வசூலை வாரிக்குவித்தன. பாகுபலி 2, கே.ஜி.எப். 2, RRR , புஷ்பா 2 படங்கள் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.

    கே.ஜி.எப். 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னட சினிமாவில் உருவானா காந்தாரா 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் வசூலை வாரிக்குவித்து கன்னட சினிமாவிற்கு புத்துயிர் ஊட்டின. அதே போல், எம்புரான், லோகா சாப்டர் 1 படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்து மலையான சினிமாவும் கோடிகளில் வசூலை குவிக்கும் என்பதை காட்டியது.

    இந்தாண்டு இதுவரை எந்த படமும் ரூ.1000 கோடி வசூலை எட்டவில்லை என்றாலும் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பல படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. குறிப்பாக தென்னிந்திய படங்கள் இந்தாண்டு அதிக வசூலை ஈட்டின.

    அவ்வகையில் இந்தாண்டு இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்த பட்டியலை பார்ப்போம்.

    1. காந்தாரா சாப்டர் 1

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

     2. சாவா

    இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர் இயக்கிய 'சாவா' திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்தது. மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷலும் சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.

    இப்படம் உலக அளவில் சுமார் ரூ.800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிவசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


    3. சையாரா

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ. 500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.


    4. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.


    5. வார் 2

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.

    சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டான ரூ.400 கோடி அளவிற்கு தான் வசூல் செய்தது.


    6. மகாவதார் நரசிம்மா

    அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.


    7. லோகா சாப்டர் 1

    நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான லோகா சாப்டர் 1 மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.

    வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.300 கோடி வசூலை கடந்து இப்படம் சாதித்தது. இதன்மூலம் கதாநாயகி முதன்மை கதாபாத்திரமாக நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை இப்படம் படைத்தது.

    உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை கடந்தது குறிப்பிடத்தக்கது.


    8. they call him OG

    சுஜித் இயக்கத்தில் they call him OG என்ற திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்தார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

    பவன் கல்யாணின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.


    9. எம்புரான்

    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு வெளியானது.

    முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மோகன்லால் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் குவித்த படமாக இப்படம் அமைந்தது.


    10. சித்தாரே ஜமீன் பர்

    2022 இல் வெளியான லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்பு நடிப்பில் இருந்து விலகி இருந்த அமீர் கான் 2025 இல் சித்தாரே ஜமீன் பர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

    இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்க, அமீர் கான் தயாரித்திருந்தார். இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.

    இந்தாண்டில் மிக சிறந்த படங்களில் ஒன்று என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. சுமார் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

    • ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.

    விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.

    அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

    இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார். 

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ‘காந்தாரா சாப்டர்1’ வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
    • கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

    கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது. 

    காந்தாரா படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.

    இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

    • ‘காந்தாரா சாப்டர்1’ படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந்தேதி ‘காந்தாரா சாப்டர்1’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம்.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2.5 மணிநேரம் பயணம் செய்து தியேட்டரில் படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரி படத்தை உருவாக்குவதே மிக கடினம். அனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.



    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 



    ×