search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka High Court"

    • தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை.
    • பல்வேறு மாநிலங்களிலும் இலவச அறிவிப்பு நடைமுறை இருப்பதாக குற்றச்சாட்டு.

    அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம்பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதில், தேர்தல் விதிகளை மீறி, உத்தரவாதங்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மனுவில், கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் அதன் ஆட்சேபத்தை பதிவு செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    • ‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
    • ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    பெங்களூரு :

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தள கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சமூக வலைத்தளமான 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

    அந்த உத்தரவில், சமூக விரோத செயல்களில் தொடர்புடையதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு 2,851 கணக்குகளையும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதனை பின்பற்ற தவறினால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    எனினும், மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் இருந்து வந்தது. மேலும், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் 'டுவிட்டர்' நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது டுவிட்டர் நிறுவனம் சார்பில் வாதாடிய வக்கீல், 'சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவது அவரவர் விருப்பம். அதை தடுக்க நினைப்பது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் ஆகும். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வலைத்தள கணக்குகளை பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதி, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் 'டுவிட்டர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்க தவறிய 'டுவிட்டர்' நிறுவனம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் 'டுவிட்டர்' நிறுவனத்தின் மனுவைவும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    • போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை
    • வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சைலேஷ் குமார். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் தனது முகநூல் கணக்கை நிரந்தரமாக நீக்கினார்.

    இதற்கிடையே அவரது முகநூல் பக்கத்தில் இருந்து சவுதி அரேபியா மன்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டது. இதுதொடர்பாக சைலேஷ் குமாருக்கு சவுதி அரேபியாவில் 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும், மங்களூருவில் உள்ள அவரது மனைவி கவிதா, மங்களூரு போலீசில் புகார் அளித்தார். அப்போது தனது கணவர், முகநூல் பக்கத்தை நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும், போலி வலைத்தள கணக்கில் இருந்து சவுதி மன்னர் குறித்து அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் விசாரணையை தொடங்கிய மங்களூரு போலீசார், போலி முகநூல் கணக்கு தொடங்கியது குறித்து முகநூல் நிறுவனத்திடம் கடிதம் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர். ஆனால், போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு கவிதா, கர்நாடக ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், விசாரணைக்காக முகநூல் நிறுவனத்தை நாடியபோது அவர்கள் முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி பேசுகையில், போலி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தால், இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடிமகன் சைலேஷ் குமார் குறித்த அனைத்து தகவல்களையும் விசாரித்து சீல் வைக்கப்பட்ட ஆவணமாக கோர்ட்டில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை பெற்று சமர்ப்பிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வெளியுறவு துறை செயலாளருக்கு கோர்ட்டு சார்பில் தனிப்பட்ட சம்மன் அனுப்பப்படும் என மத்திய அரசை நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் முகநூல் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kaala #Kumarasami
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

    ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று (அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #Kaala #Kumarasami 
    ×