என் மலர்
நீங்கள் தேடியது "Deaths"
- இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
- உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.
உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய டாக்டர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
- சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம்.
ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக ஆர்சிபி அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில்,பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
அப்போது, விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.
- கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கும்போது விபத்து
- பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை.
இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
- இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
- பிஷ்டப்பா குடிமணி (45) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிஷ்டப்பா குடிமணி (45) என்ற நபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மனைவி ஷீலா கணவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, "உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?" என்று அழுதுகொண்டே கூறியவுடன் பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் இரங்கல் அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் உயிர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
- புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.
- உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.
தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் இத்கோரி வட்டத்தைச் சேர்ந்தவர் மீனா முஷார் (வயது 45). இவர் தெருவோரம் கிடக்கும் பழைய பேப்பர், பிளாஸ்டிக்குகளை சேகரித்து விற்பனை செய்து அதன்மூலம் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த திங்கட்கிழமையன்று திடீரென இறந்துவிட்டார்.
அவர் கடந்த நான்கு நாட்களாக வருமானம் எதுவும் இல்லாமல் சாப்பிடவில்லை என்றும், பட்டினியால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது மகன் கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதேபோல் முன்னதாக, கிரிடி மாவட்டம் மங்கர்காடி கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி தேவி (வயது 65) என்ற மூதாட்டி சனிக்கிழமை பட்டினியால் இறந்துள்ளார். அவருக்கு ரேசன் கார்டு கிடையாது. முதியோர் பென்சனும் கிடைக்கவில்லையாம். பிள்ளைகள் பிழைப்பு தேடி வெளியூர் சென்ற நிலையில், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த சாவித்திரி தேவி, கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் இல்லாமல் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த இரு பட்டினி மரணங்கள் குறித்தும் அரசின் கவனத்திற்கு தெரியவந்ததும், இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதல்வர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார். #StarvationDeaths






