என் மலர்

  நீங்கள் தேடியது "factory"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை பணிமனையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.

  விருதுநகர்

  விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

  மாணவர்கள் தொழிற்ப யிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், சமூக பொருளா தார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

  இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

  அந்த வகையில், விருதுநகர் அரசினர் தொ ழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

  அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.

  பின்னர், இந்த ஆண்டி ற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கைக்கு அனுமதி க்கப்பட்ட தொழிற்பி ரிவு பயிற்சி யாளர்க ளுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

  அதனை தொடர்ந்து, தொழிற்ப யிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் மே கநாதரெட்டி மரக்க ன்றினை நட்டு வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர்(திருநெல்வேலி) செல்வக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் பிருந்தாவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, தொழிலக பாதுகாப்பு துறை சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு பொன்ராஜ் ஆகியோர் நாட்டார்மங்கலம் என்ற இடத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு ஆலை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர்.

  அப்போது அங்கு பட்டாசு உற்பத்தி செய்வது தெரியவந்தது. மேலும் 7 மூட்டை கரி மருந்து, 5 கிலோ மணி மருந்து, 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

  இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
  • பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  திருப்பூர் :

  பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து கருத்தரங்கு, பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த சமூக நலத்துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் நடைபெற்றது.

  இதற்கு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் த.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.பி.காா்த்திகா ஆகியோா் தலைமை வகித்தனா்.

  நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.மாவட்ட கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

  நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

  பெண் தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரிவது திருப்பூா் மாவட்டத்தில்தான். அந்த வகையில் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும் என்றாா்.

  அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-

  ஒவ்வொரு அரசு மற்றும் தனியாா் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலைகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.

  இதையடுத்து அமைச்சா்கள் புதிய திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு பெட்டியை வழங்கி ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து சமூக நலத்துறையில் சிறந்த பணியாளா்களுக்கான விருது பெற்ற 3 நபா்களுக்கு ரூ.5ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு, மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.12,500 மதிப்பில் செல்போன் உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.

  இதில் திருப்பா் மேயா்தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், ராமகிருஷ்ணன் (பனியன் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளா்), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராஜாசண்முகம், ஏ.சி.ஈஸ்வரன் (சைமா தலைவா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயாரிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், நதிப்பாலம், வாலிநோக்கம், தேவிபட்டினம், சம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்களின் நேரடி பயன்பாட்டிற்கும், 2-ம் தர உப்பு கருவாடு, தோல் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

  உப்பு உற்பத்திக்கான சீதோஷ்ண நிலை நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாறுபடுவதால் இந்த கால கட்டத்தில் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியை நிறுத்திக் கொண்டு, உப்பள பாத்திகளை வடிவமைத்தல், மறு சீரமைப்பு, பாத்திகளில் படிந்துள்ள ஜிப்சங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். 2 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணியின் போது உப்பள பாத்திகளில் வெட்டி எடுக்கப்பட்ட ஜிப்சம் தற்போது உப்பளங்களின் ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

  இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ValluvarKottam #FireinFactory
  சென்னை:

  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று இரவு பயங்கர தீப்பற்றி எரிந்தது. 

  தகவலறிந்து தீயை அணைக்க 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 20க்கு மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  தொழிற்சாலையில் பற்றிய தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தொழிற்சாலை அருகில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டனர். தீ பர்வாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. #ValluvarKottam #FireinFactory
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #SupremeCourt #ThamirabaraniRiver
  புதுடெல்லி:

  தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

  இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

  இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.  பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜோயல் தரப்பில் மூத்த வக்கீல் அனிதா செனாய் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆஜரானார்கள்.

  இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ‘ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

  மேலும், இந்த வழக்கில் 21-ந்தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt #ThamirabaraniRiver
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.  ஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது. அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

  அதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள் கூலியும் அதிகரித்துவிட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

  எனவே, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்துவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  வாலாஜா:

  வாலாஜாவிலிருந்து வன்னிவேடு மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆற்காடு தெத்து தெரு உள்ளது. இங்கு கடந்த 20 வருடங்களாக ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

  நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு சென்ற பின்னர் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7½ மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில் தீ பயங்கரமாக பற்றி பரவ தொடங்கியது.

  இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தொழிற்சாலை உரிமையாளருக்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

  இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, சிப்காட், ஆற்காடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகள் மற்றும் தயாரிப்பு மூல பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பல் ஆகின.

  இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொடக்குறிச்சியில் தொழிற்சாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
  மொடக்குறிச்சி:

  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40).

  இவர் அந்த பகுதியில் கிரானைட் கற்களுக்கு பாலீஸ் தீட்டும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

  வழக்கமாக இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் தொழிற்சாலையை மூடி விட்டு உரிமையாளர் இளங்கோவனும் தொழிலாளர்களும் சென்று விடுவது வழக்கம்.

  ஆனால் நேற்று இரவு வேலை முடிந்ததும் சில தொழிலாளர்கள் சென்று விட்டனர். தொழிற்சாலைக்குள் இளங்கோவன் உள்பட 10 பேர் படுத்து தூங்கினர்.

  இன்று அதிகாலை 5 மணி அளவில் தொழிற்சாலையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உரிமையாளர் இளங்கோவன் எழுந்த வந்து கதவை திறந்தார்.

  அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 5 பேர் நின்றனர். அவர்கள் இளங்கோவனிடம் தண்ணீர் கேட்டனர். எனவே அவர்களை இளங்கோவன் தொழிற்சாலைக்குள் அனுமதித்தாக தெரிகிறது.

  தொழிற்சாலைக்குள் வந்த அந்த வட மாநில வாலிபர்கள் அங்கு இளங்கோவன் மட்டுமே இருக்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். எனவே இளங்கோவனினை அவர்கள் மிரட்டி பணம் கேட்டனர்.

  மேலும் அங்கு கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்பாராத இளங்கோவன் சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.

  அவர்களை பார்த்ததும் அந்த வட மாநில வாலிபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை இளங்கோவனும் தொழிலாளர்களும் துரத்தி சென்றனர். அக்கம் பக்கத்தினர் சிலரும் அங்கு வந்து அந்த வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

  அந்த வாலிபர்களில் 2 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கினர். மற்ற 3 வாலிபர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.

  பிடிபட்ட வட மாநில வாலிபர்களிடம் பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபர் எந்த தகவலையும் கூறவில்லை.

  ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிடிபட்ட 2 வாலிபர்களையும் அங்க ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

  திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைக்கு நியமிக்கப்பட்ட ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அங்கு வந்தார்.

  பொதுமக்களிடம் இருந்து அந்த 2 வாலிபர்களையும் மீட்ட போலீசார் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.#tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய பெண் உடல் கருகி பலியானார்.
  வேடசந்தூர்:

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், போலீஸ்காரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மோகன்ராஜ் சுக்காம்பட்டியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

  இந்த ஆலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சுக்காம்பட்டியில் தங்கியுள்ளனர். இவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பொன்னுத்தாய் (வயது 52) என்பவரும் ஒருவர்.

  இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தனது செல்போனை தொழிற்சாலையிலேயே மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார். அதை எடுப்பதற்காக பொன்னுத்தாய் நேற்று ஆலைக்கு வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலைக்கு வேறுயாரும் வேலைக்கு வரவில்லை.

  பொன்னுத்தாய், தான் வேலை பார்த்த இடத்துக்கு சென்று அறைக்கதவை திறந்த போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறிது நேரத்தில் கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் சிக்கிக்கொண்ட பொன்னுத்தாய், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

  வெடிவிபத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  ×