என் மலர்
நீங்கள் தேடியது "வருமான வரித்துறை"
- வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு மின்னஞ்சல்கள் வருகின்றன
- அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.
இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
- ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
- வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நோட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.
- வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
- இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
- தொழில்நுட்ப சிக்கல்களால் வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வோர் அவதியடைந்தனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்துவரும் நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களால் அவதியடைந்துள்ளனர்.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.
உத்தமபாளையம்:
தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.
இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது
- சஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் ஒரு தனியார் அறையில் பணம் நிறைந்த புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கம் நேற்று வருமான வரித் துறை சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வெளியிடப்பட்ட மறுநாளே இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவுரங்காபாத் (மேற்கு) தொகுதி எமில்ஏவும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சருமான சஞ்சய் ஷிர்சாத், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர்.
இந்த வீடியோவை உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் வீடியோவில் காணப்படும் சூட்கேசில் பணம் இல்லை என்றும், அது துணிகளை வைப்பதற்கான பை என்றும் சஞ்சய் ஷிர்சாத் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சிலர் வருமான வரித்துறையில் தனக்கு எதிராக புகார் அளித்ததாகவும், இதன் காரணமாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையேசஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
- ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஐடிஆர் படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தயாராவதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
முதலில், இந்தக் காலக்கெடு ஜூலை 31, 2025 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்காக அறிவிக்கப்பட்ட ஐடிஆர் படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தயாராவதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.
வரி செலுத்துவோர் எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் வருமானத்தை எளிதாக தாக்கல் செய்ய, ஜூலை 31 காலக்கெடுவை செப்டம்பர் 15 வரை நீட்டிக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
- ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
- வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
சமீப காலமாக சாமானியர்களுக்கு கொடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த நோட்டீஸ்கள் வந்திருந்தன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் ராஜ்குமார் சிங் என்ற வாட்ச்மேனுக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துபோன ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இவரின் பேன் கார்ட் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்
- நாங்கள் உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என்று ரஹீஸின் தாய் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்துபவர் சுமன். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோடீஸில், பிரின்ஸ் சுமன், அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோடீஸில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் சுமனின் பெயரில் "பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுமன், "நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்கே இதுவரை சென்றதில்லை. பின் அங்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எப்படி சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
சிறிய மளிகைக் கடை நடத்தி வரும் சுமனுடைய தந்தை ஸ்ரீதர் சுமன் பேசுகையில், "எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்றார்.
சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு தெரிந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க காவல்துறை மற்றும் வருமான வரி அதிகாரிகளை அணுகியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கு ரூ.7.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனுப்பப்பட்ட நேட்டீஸில், 2020-21 ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், "இந்த நோட்டீஸ் எதற்க்கு என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.
"நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?" என்று ரஹீஸின் தாய் கூறினார்.
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.
சிவா டெக்ஸ்டைல்ஸ்
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
- நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
சென்னை :
அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்து, விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.
இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தவில்லை. இதையடுத்து, அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ''நான் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எம்.எல்.ஏ.-க்குரிய ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டுக்குரிய நிதியை பெறும் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கி விட்டனர். இதனால், தொகுதி நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, வங்கிக் கணக்குகள், நிலத்தை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை வரிவசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கூறியிருப்பதாவது:-
விஜயபாஸ்கருக்கு கடந்த 2011-12 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும்படி உத்தரவிட்டும், அவர் வரிபாக்கியை செலுத்தவில்லை. முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கில் கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கு தமிழ்நாடு அரசு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்து 226-ஐ செலுத்தியுள்ளது.
அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கப்படவில்லை. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால் சட்டப்படி சொத்துக்களை, வங்கி கணக்குகளையும் முடக்கி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமானவரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியாக உள்ள தொகையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பியும் அதையும் அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
விஜயபாஸ்கருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு அதன்பிறகு மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு நபர்களுக்கு விற்பதை தடுக்கவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்துக்குட்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சித்து வருகிறார்.
எனவே வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட எந்த அவசியமும் இல்லை என்பதால் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.






