என் மலர்tooltip icon

    இந்தியா

    மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் காவலாளி.. ரூ.2.2 கோடி கேட்டு  நோட்டீஸ்  அனுப்பிய வருமான வரித்துறை!
    X

    மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் காவலாளி.. ரூ.2.2 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!

    • ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
    • வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

    சமீப காலமாக சாமானியர்களுக்கு கொடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த நோட்டீஸ்கள் வந்திருந்தன.

    இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் ராஜ்குமார் சிங் என்ற வாட்ச்மேனுக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துபோன ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இவரின் பேன் கார்ட் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×