என் மலர்
நீங்கள் தேடியது "Income Tax"
- ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆக இருந்த காலக்கெடுவை அக்டோபர் 31, 2025 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றை காரணம் காட்டி அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
மேலும் தணிக்கை அறிக்கை தாக்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
- எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா2025 நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் பழைய பாதிப்பு கடந்த வாரம் திரும்பபெறப்பட்டது.
31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக வழங்கிய பரிந்துரைகளை சேர்த்து மசோதாவின் புதிய பதிப்பு நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்ட்டது.
இந்த மசோதா சட்டமான பின்னர், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
- TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025 எந்த எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இந்த மசோதா ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
வருமான வரி மசோதா 2025 எந்த புதிய வரிகளையும் விதிக்காது. இது தற்போதுள்ள வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றாது.
மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான நிலுவைத் தேதிகள், வருமான வரி அடுக்குகள் மற்றும் மூலதன ஆதாயங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இந்த மசோதாவில் பிரிவு 80M, குறைந்தபட்ச வரி (MAT & AMT), மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான வரி விதிகள் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் உள்ளன.
புதிய வரி முறையை தேர்வு செய்கின்ற நிறுவனங்கள் தற்போது 1961 சட்டத்தின் முந்தையப் பிரிவு 80 M இன் கீழ் விலக்குகளை பெற உரிமை பெறுவார்கள்.
குறைந்தப்பட்ச மாற்று வரி (MAT) மற்றும் மாற்று குறைந்தபட்ச வரி (AMT) விதிகளை தனித்தனி பகுதிகளாக பிரிப்பதன் மூலம் புதிய மசோதா தெளிவுப்படுத்துகிறது.
எளிமையான புரிதலுக்காக 'முந்தைய ஆண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்பதற்குப் பதிலாக 'வரி ஆண்டு' என்ற ஒருங்கிணைந்த கருத்து இப்போது இருக்கும்.
TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இடையேயான ஈவுத்தொகையில் ரூ.80 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், புதிய சொத்துகளில் மூலதன ஆதாயங்களை மீண்டும் முதலீடு செய்வது வருமானத்திற்கான பயன்பாடாக கருதப்படும்.
மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
- இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
கடந்த பிப்ரவரி 13 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.
டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் நேரடி வரி கட்டமைப்பின் அடிப்படையாக இருந்து வரும் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி, இந்த மசோதாவின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த புதிய பதிப்பு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதா ஆகஸ்ட் 11 ஆம் தேதி மக்களவையில் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
- தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.
உத்தமபாளையம்:
தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.
இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செவ்வாய்க்கிழமை முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
- முன்னணி வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தி வருகின்றன.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
பான் கார்டு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம்
மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) விதிகளின்படி, செவ்வாய்க்கிழமை முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இதுவரை, ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அடையாள அட்டைகளுடன் பான் கார்டைப் பெறுவது சாத்தியமாக இருந்தது.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று CBDT கூறியுள்ளது. இந்த விதியைப் பின்பற்றாதவர்கள் தங்கள் பான் கார்டுகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது.
இதேபோல், ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் கூட ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கும். இதனுடன், ஜூலை 15 முதல் ஆன்லைனில் அல்லது கவுண்டரில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். மறுபுறம், ரயில் டிக்கெட் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி அறிக்கை
வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31 முதல் செப்டம்பர் 15 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இது ஊழியர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 46 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.
வங்கி மாற்றங்கள்
முன்னணி வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தி வருகின்றன.
SBI வங்கி அதன் எலைட், மைல்ஸ் எலைட் மற்றும் மைல்ஸ் பிரைம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளுடன் வாங்கப்பட்ட விமான டிக்கெட்டுகளில் வழங்கப்படும் விமான விபத்து காப்பீட்டு வசதியை நிறுத்துகிறது.
மாதாந்திர பில்களில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை (MAD) கணக்கிடும் முறையிலும் இது மாற்றங்களைக் கொண்டுவரும்.
HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் சில பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1, 2025 முதல், வாடகை, ரூ.10,000-க்கு மேல் ஆன்லைன் கேம்கள், மற்றும் ₹50,000-க்கு மேல் மாத பயன்பாட்டு பில்களுக்கு 1% பரிவர்த்தனை கட்டணம் (அதிகபட்சம் ₹4,999) வசூலிக்கப்படும். மேலும், ₹10,000-க்கு மேல் டிஜிட்டல் வாலட்டில் பணம் சேர்த்தாலும் இதே கட்டணம் பொருந்தும்.
ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் பரிவர்த்தனைகள் சேவை கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் முதல் ஐந்து ஏடிஎம்களுக்கு பணம் இலவசம். அதன் பிறகு பணத்தை எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களுக்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் செய்யலாம். இதற்கு மேல் நீங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு முறையே ரூ.23 மற்றும் ரூ.8.5 செலுத்த வேண்டும்.
- வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன.
- புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கரூர்:
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார் பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.
இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருகிற மே 23-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.
- வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.
பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.
வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
- சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சென்னை :
வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.
சிவா டெக்ஸ்டைல்ஸ்
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.
செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.
வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






