என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி கணக்கு"
- உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.
இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.
- குறை தீர்வு கூட்டத்தில் புகார்
- வங்கி மேலாளர் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. உதவி கலெக்டர் கவிதா உள்ளிட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்.என். பாளையம், பச்சையப்பன் கவுண்டர் விரிவு பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை.
இதனால் நாங்கள் பரிதவிக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
செதுவாலை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் செதுவாலை ஏரியில் வசித்து வருகிறோம். தற்போது செதுவாலை ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மழைகாலங்களில் சேறும், சகதியும் வசிக்கும் நிலை உள்ளது.
நாங்கள் அனைவரும் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறோம். எங்களால் அங்கு கைக்குழந்தைகளுடன் குடியிருக்க முடியவில்லை. ஏற்கனவே ஏரியில் வசித்த 5 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.
வேலூர் நம்பிரா ஜபுரத்தை சேர்ந்த வேண்டா கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
நான் விரும்பாட்சி புரத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கிற்கு கடந்த 3 மாதமாக மகளிர் உதவித்தொகை வந்துள்ளது. மேலும் எனது மகள் திருமணத்திற்கு வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் உள்ளி ட்டவை எடுக்க ப்பட்டாத தகவல் வந்தது.
இது குறித்து வங்கியில் சென்று கேட்ட போது, எனது வங்கிக் கணக்கிலேயே மற்றொருவருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது தெரிந்தது. இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் என்னை அலைக்கழித்து வருகிறார். எனவே எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- தயாநிதி மாறன் செல்போன் எண்ணுக்கு பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.
- மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.
சென்னை:
'டிஜிட்டல்' மயமான உலகில், மோசடி செயல்கள் 'ஹைடெக்' ஆகி உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 'உங்கள் கணக்கு எண் விவரங்களை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என்று அப்பாவி மக்களை ஏமாற்றி, 'ஓ.டி.பி.' எண்ணை பெற்று பண மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதே பாணியில், 'நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. குறிப்பிட்ட 'லிங்க்'கில் சென்று பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்று குறுந்தகவல் அனுப்பியும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சட்டென்று எடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் 'சைபர்' மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி. வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்.பி.யின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது.
இந்த மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.
வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
- கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 101 வரவு வைக்கப்பட்டு அந்த தொகை 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பண்டித விஜயலட்சுமி (வயது 55). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கான முதியோர் ஓய்வூதியம் அந்த வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 மாதமாக முதியோர் ஓய்வூதியம் வராமல் இருந்தது. இதனால் அந்த வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
அப்போது கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, இருப்புத்தொகை ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191 இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191- ஐ 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் வங்கி கையிருப்பு பூஜ்ஜியம் என்று ஆனது.
இது குறித்து விஜயலட்சுமி வங்கி தரப்பில் விசாரித்தபோது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, வேறு ஒருவரின் வங்கி கணக்கு தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
- இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
- ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கணக்கு வைத்துள்ள கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும் கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
- பெண்களின் கணக்கை ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும் போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லக் கூடியதாகும். அதாவது கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும் கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்த பட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்த பட்ச இருப்பை விட பணம் குறையும் போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது.
வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது. இத்திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்கா கும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- ஒருவர் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.
- மற்றொரு அதிகாரி போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டினார்.
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 28). வாடகை கார் டிரைவர். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கார் ஓட்டி வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த 9-ந் தேதி குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து இந்த குறுந்தகவல் வந்தது. இதனால் அவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
பணம் வந்திருப்பது உண்மைதானா? என்று பரிசோதிக்க விரும்பிய அவர் ரூ.21 ஆயிரம் பணத்தை நண்பரின் வங்கி கணக்குக்கு செலுத்தி பார்த்தார். அந்த தொகை சென்றவுடன் மீதமுள்ள தொகை குறித்து ராஜ் குமாருக்கு மீண்டும் குறுந்தகவல் வந்தது. ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொருபுறம் இந்த பணத்தால் பிரச்சினை ஏதும் வருமோ? என்ற எண்ணமும் ராஜ்குமாருக்கு இருந்தது. இந்த நிலையில் சுமார் 30 நிமிடங்களில் அந்த பணம் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்பட்டது.
இதற்கிடையே ரூ.21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு அனுப்பி இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் ராஜ்குமாருக்கு போன் செய்து பணத்தை தவறு தலாக அனுப்பி விட்டதாக வும், ரூ.21 ஆயிரத்தை திருப்பி தராவிட்டால் போலீசில் புகார் செய்வோம் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி. நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. ரூ.21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம், கார் வாங்க கடனுதவி அளிப்பதாகவும் ராஜ்குமாரிடம் வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக ரூ.9 ஆயிரம் கோடி பணம் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து ராஜ்குமார் கூறியதாவது:-
என் வங்கிக் கணக்குக்கு இவ்வளவு பணம் வந்ததை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு பணத்தை நான் கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை.
எனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி பணம் வந்ததை அறிந்ததும் திகைத்துப் போனேன். ஆனால் அரை மணி நேரத்தில் அந்த பணம் மீண்டும் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
வங்கிக் கணக்கில் உண்மையிலேயே பணம் வந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரிலும், எனது நண்பர்களின் அறிவுரைப் படியும் தான் நண்பர் ஒருவருக்கு ரூ.21 ஆயிரத்தை அனுப்பி பார்த்தேன்.
எனது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டு திருப்பி எடுக்கப்பட்ட பிறகு அதில் ரூ.21 ஆயிரம் குறைந்திருந்ததால் வங்கியில் இருந்து அடுத்தடுத்து 2 அதிகாரிகள் போனில் என்னுடன் பேசினார்கள். ஒருவர் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து பேசினார். ஆனால் மற்றொரு அதிகாரி போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டினார்.
ஆனாலும் என் மீது தவறு இல்லாததால் நான் பயப்பட வில்லை. பிரச்சினை ஏதும் வரக் கூடாது என்பதற்காக தி.நகரில் உள்ள வங்கி கிளை அலுவலகத்துக்கு சென்று விளக்கம் அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
- தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது.
வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.
ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.
இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.
இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
- 106 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது.
- 22 குழந்தைகளுக்கு ரூ.75,000-க்கான நிதிப் பத்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து செல்வ மகள் சேமிப்பு திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 106 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.500 வீதம் சேமிப்பு கணக்கில் செலுத்தி சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.
முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தினமான கல்வி வளர்ச்சி தினத்தில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி. ஓவிய போட்டி, பட்டி மன்றம் மற்றும் கவிதை போட்டி ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் விபத்தில் வருவாய் ஈட்டும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரூ.75,000 நிதி நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 21 குழந்தைகளுக்கும், ஏரியூர் ஒன்றியத்தை சேர்ந்த 1 குழந்தைக்கும் ஆக மொத்தம் 22 குழந்தைகளுக்கும் தலா ரூ.75,000/- க்கான இட்டு வைப்பு நிதிப் பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மான்விழி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.