என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heirs"

    • வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
    • உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும்.

    சென்னை:

    வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.

    ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58 ஆயிரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன்மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

    வங்கியில் கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே தற்போது நியமிக்கலாம். இதில், வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.

    புதிய விதிகளின்படி வங்கியில் கணக்கு, வங்கிகளில் லாக்கர் வசதியை வைத்திருப்பவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமித்துக்கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ''புதிய விதிகளின்படி, வங்கியில் கணக்கு பராமரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய தொகையையும் வௌிப்படையாக அறிவிக்கலாம். இதேபோல லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களும் வாரிசுதாரர்களாக 4 பேரை நியமிக்கலாம்.

    லாக்கர் பராமரிப்பவர்கள் ஒருவேளை மரணம் அடைந்தால், அவருக்கு பின்னர் யார் அதனை கையாளவேண்டும் என்பதையும் தெரிவிக்கலாம். இதனால் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறினர்.

    • பணிக்காலத்தில் இறந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • இந்த ஆணையை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகமாக இருந்தன.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்ப திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரமக்குடி வட்டம், கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 21.5.2018 அன்று பணியிடையே இறந்த மாரிமுத்து என்பவரது மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி யிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 6.12.2017 அன்று பணியிடையே இறந்த சதீஸ் என்பவரது மனைவி ஜெயசிந்தியாவிற்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையி னையும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×