search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Locker"

  • மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.
  • சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

  கடலூர்:

  குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதியில் வசிப்பவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி ஆனந்தி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு, பள்ளிக்கு சென்றனர். மதியம் உணவு உண்ப தற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திற ந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவும் திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சரிபார்த்தனர். அப்போது, பூஜை அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகாரளித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’.
  • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் என்- யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'லாக்கர்'. இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர், மாஸ்டர் படங்களில் நடித்த விக்னேஷ் சண்முகம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.


  மேலும், வில்லனாக தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்த நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். பிரின்ஸ், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


  'லாக்கர்' படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ளனர். ராபரி டிராமாவாக உருவாகியுள்ள 'லாக்கர்' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதி கட்டப் பணியில் இருக்கும் 'லாக்கர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பேசிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள்.
  • பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து மூதாட்டி பதட்டம் அடைந்தார்.

  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) மற்றும் அவரது மனைவி ராணி, மகன் மணிவாசகம் ஆகியோர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் ராஜேந்திரனின் தாயார் வயதானவர் இருந்துள்ளார். அப்பொழுது ராஜேந்திரனின் மகன் மணி வாசகத்தின் நண்பர்கள் என்று சொல்லி, வீடு கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் சென்று உள்ளனர்.

  மூதாட்டியிடம் கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பே சிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள். அப்பொழுது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து இருப்பதைக் கண்டனர். பாட்டி மாவிலை பறிக்க கொள்ளைக்கு சென்ற நிலையில், திறந்திருந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொள்ளையில் இருந்து வந்த பாட்டி பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து பதட்டம் அடைந்தார்.

  இதனை எடுத்து திருடு போன தகவல் குறித்து மணிவாசகத்திடம் நடந்த நிகழ்வுகளை கூற, பத்திரிக்கை வைப்பது போல் வந்து நாடகமாடி தனது பாட்டியை ஏமாற்றிமர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்றதாக மணிவாசகன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  ×