மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்கள்

கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பேசிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள்.பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து மூதாட்டி பதட்டம் அடைந்தார்.
மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்கள்
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) மற்றும் அவரது மனைவி ராணி, மகன் மணிவாசகம் ஆகியோர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் ராஜேந்திரனின் தாயார் வயதானவர் இருந்துள்ளார். அப்பொழுது ராஜேந்திரனின் மகன் மணி வாசகத்தின் நண்பர்கள் என்று சொல்லி, வீடு கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் சென்று உள்ளனர்.

மூதாட்டியிடம் கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பே சிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள். அப்பொழுது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து இருப்பதைக் கண்டனர். பாட்டி மாவிலை பறிக்க கொள்ளைக்கு சென்ற நிலையில், திறந்திருந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொள்ளையில் இருந்து வந்த பாட்டி பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து பதட்டம் அடைந்தார்.

இதனை எடுத்து திருடு போன தகவல் குறித்து மணிவாசகத்திடம் நடந்த நிகழ்வுகளை கூற, பத்திரிக்கை வைப்பது போல் வந்து நாடகமாடி தனது பாட்டியை ஏமாற்றிமர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்றதாக மணிவாசகன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com