என் மலர்
நீங்கள் தேடியது "case register"
- வீட்டின் வாசல்படியில் நின்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார்.
- பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் தோப்புத் தெருவில் வசித்து வந்தவர் சாரதா என்கிற சாரதாம்பாள் (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் வாசல் படியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
இதில் பலத்த படுகாயம் அடைந்த சாரதாம்பாள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்து வமனையில் இறந்து விட்டார்.
இது குறித்து அவருடைய மகள் செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதியில் வசிப்பவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி ஆனந்தி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு, பள்ளிக்கு சென்றனர். மதியம் உணவு உண்ப தற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திற ந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவும் திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சரிபார்த்தனர். அப்போது, பூஜை அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகாரளித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சினேகா கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார்.
- சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த நடுகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.கூலித் ெதாழிலாளி. இவரது மகள் சினேகா. இவர் கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடி எங்கும் கிடை காததால் காடாம்புலியூர் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடு த்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4ஆண்டு க்கு முன்பு காணாமல் போன இளம் பெண் சினேகாவை, இன்ஸ்பெக்டர்ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் பல்வேறு கோணங்களில் நடத்தி தேடி வந்தனர். இவர்களது தீவிர முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகுபழனி அருகே ஒரு கிராமத்தில்இளம் பெண் சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். இவர்களை காடாம்புலியூர்போலீஸ் நிலையத்திற்குஅழைத்துவரஏற்பாடுசெய்துள்ளனர்.
- செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.
- அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட தனிபிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
மேற்படி அவர்கள் செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 27), கவரை கிராமத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் மகன் தருண்குமார்(20) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
- 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.
இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது.
- கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆங்காங்கே போராட்டங்களும் வலுத்து வருகின்றன. புதுச்சேரி மாநில அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆகியோர் பந்த் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பாஜகவினர், 20 சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 80 சதவீதம் உள்ள பாஜகவினர் 20 சதவீதம் தான் வாக்களிக்கின்றனர். ஆனால் 20 சதவீதம் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80 சதவீதம் வாக்கப்பதாக கூறினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்த்ல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு.
- பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேகவுடாவின் மகன் மற்றும் பேரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரியில் இன்று நிகழ்ந்த எதிர்பாராத வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்துகளை இறக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கல்குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில், குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார்.
- தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு.
- காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த விவகாரத்தில் எஸ்.ஐ உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரின் இடத்தை, அதே பெயரில் உள்ள மற்றொருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடையில்லா சான்றை வைத்து பவர் பத்திரம் மூலம் நிலத்தை சோமசுந்தரம் என்பவர் விற்பனை செய்துள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர், சப் ரிஜிஸ்டர், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் உள்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஞானசேகரன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
127(2)- ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.
351(3) - ஒருவருக்கு தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டுதல்.
67 மற்றும் 67 (A)- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






