என் மலர்

  நீங்கள் தேடியது "old lady"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.
  • இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  சேலம்:

  இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தும்பாயி (வயது85). இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் சித்துராஜ் ஆகியோருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.

  நேற்று காலை சித்துராஜ் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றபோது கிணற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அப்போது கிணற்றை எட்டிப் பார்த்தபோது தும்பாயி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

  இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீயணைப்பு துறையினர் மூலம் பிணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரஸ்வதி நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
  • திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

  நெல்லை:

  நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி பகுதியை அடுத்த பாப்பான்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.

  திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.

  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70).
  • அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவருக்கும், அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

  இந்த தகராறில் ஏற்கனவே இசக்கிமுத்து, சண்முகத்தாயையும், இசக்கிபாண்டி, தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகத்தாய் அங்குள்ள புரோட்டா கடை முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கிப்பாண்டி சொத்தை எனக்கு எப்போது எழுதி தருவாய் எனக் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயாரான சண்முகத்தாயை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியை தாக்கிய மகனை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி-வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
  • 90 கிராம், 1.300 கிலோ கஞ்சாவுடன் அவர்கள் பிடிபட்டனர்.

  மதுரை

  மதுரை-அருப்புக்கோட்டை மெயின் ரோடு, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் மூதாட்டி கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

  அப்போது டீக்கடை பின்புறம் மூதாட்டி, 90 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் பச்சைமால் மனைவி மூக்கம்மாள் (வயது 75) என்பது தெரிய வந்தது. அவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

  தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

  அங்கு 1.300 கிலோ கஞ்சாவுடன் செல்லூர் ஜீவா நகர், தங்கமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாம்புகட்டை கணேசன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
  • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

  கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த மூதாட்டி மாயமானார்.
  • அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது பற்றி அவரது மகன் அஸ்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  சேலம்:

  சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி பாக்கியம் (வயது 86). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது பற்றி அவரது மகன் அஸ்தம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியம் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின் றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருக்கிறார்.
  • கிருஷ்ணம்மாள் எந்த நோய் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார்.

  துடியலூர் :

  கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 1917-ம் ஆண்டு பிறந்தார். தற்போது 106 வயதான கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணம்மாளின் கணவர் ராயப்பர் கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராயப்பன் என்ற மகனும், ராயக்காள் என்ற மகளும் உள்ளனர்.

  ராயப்பன், அவருடைய தங்கை ராயக்காள் ஆகியோருக்கு தலா 3 குழந்தைகள் உள்ளனர். ராயக்காளின் 3. குழந்தைகள் மூலம் 7 பேரன் பேத்திகள் மற்றும் 2 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணம்மாளின் பிறந்த நாளை கிடா வெட்டி உறவினர்கள் மற்றும் பொது மக்களுக்கு விருந்து கொடுத்து கொண் டாடினர். மேலும் அவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  இது குறித்து கிருஷ்ணம்மாளின் குடும்பத்தினர் கூறுகையில், கிருஷ்ணம்மாள் எந்த நோய் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார். அவர், ராகி, சோளம் போன்ற தானிய உணவு வகைகளையே சாப்பிடுகிறார். கீரை கட்டாயமாக சேர்த்துக் கொள்வார். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வார் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.
  • இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகில் உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.இவரது மகன் ரவி நாமக்கல்லில் வசித்து வருவதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் தான், அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.

  இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் வீட்டில் உள்ளவர்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி அந்த பெண் பூஜை நடத்தினார்.

  அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்கவேண்டும் என கூறியதை அடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்துள்ளார். பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்த எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 மூலைகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாப்பாயி எலுமிச்சம் பழத்தை வீட்டின் 4 மூலைகளிலும் போடுவதற்காக வெளியே சென்றார். இதை பயன்படுத்தி பூைஜயில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பி சென்றார். இதனை பார்த்த பாப்பாயி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதற்குள் அந்த மர்ம பெண் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

  இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு சென்ற மூதாட்டி மாயமானார்.
  • சுசிலாவின் மகன் அப்புசாமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

  விழுப்புரம்:

  திருவெண்ணைநல்லூர் இந்திரா வீதி நகரைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 80) சம்பவத்தன்று இவர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்ப வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் சுசிலாவின் மகன் அப்புசாமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார்.
  • 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

  கோவை 

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 38).

  சம்பவத்தன்று இவர் தனது மகனை அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பயிற்சி மையத்துக்கு ெமாபட்டில் அழைத்து சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் வழியில் கதிரவன் நகரில் உள்ள ரோட்டோர பூக்கடையில் பூ வாங்கி விட்டு மொபட்டை எடுப்பதற்காக வந்தார்.

  அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் லாவண்யா கழுத்தில் அணிந்து இருந்த 8¼ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து லாவண்யா மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  இடிகரை அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிர்மலா (60). சம்பவத்தன்று இவர் தனது சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக நரசிம்ம நாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் நிர்மலா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

  இது குறித்து அவர் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது
  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்

  கரூர்:

  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நள்ளிரவில் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை வாங்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.

  கரூர் மாவட்டம் வாங்கல் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புரெத்தினம். இவர் மனைவி ஜெயம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், ஜெயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து வாங்கல் போலீசில் ஜெயம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள்.
  • காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.

  கடலூர்:

  மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபு (வயது.46). இப்பகுதியில் உள்ள இவரது கான்கிரீட் வீட்டின் அருகே உள்ள இவரது பழைய ஓட்டு வீட்டில், கோபுவின் பாட்டி மனைவி காவேரி (வயது.72) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில், பழைய ஓட்டு வீட்டில் உள்ள பனை மரச் சாரத்தில், 3 அடுக்குகள் அமைத்து விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள், அங்கு படுத்திருந்த காவேரியை கடித்தது. இதனையடுத்து, காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் (போக்குவரத்து) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், அசோக், செல்வம் ஆகியோர் அங்கு விரைந்துச் சென்று, 3 அடுக்குகளில் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டினை முற்றிலும் அகற்றி அப்புறபடுத்தினர்.