மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (65). பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.

இதுகுறித்து வேலூர் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com