என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிர்வாணமாக சுற்றித் திரிந்த மூதாட்டியை மீட்டு கடலூர் முதியோர் காப்பகத்தில் சேர்த்த இளைஞர் குழுவினரை படத்தில் காணலாம்.
பண்ருட்டியில் நிர்வாணமாக சுற்றி திரிந்த மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு இளைஞர் குழுவுக்கு குவியும் பாராட்டு
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள ஏ.மணி நகரில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக வீதியில் சுற்றித்திரிந்தார். இதனால்அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்த ஆடைகளை அவருக்கு அணிவிக்க முயன்றனர். அதை அணியாமல் நிர்வாணமாகவே மூதாட்டி சுற்றி திரிந்தார்.
தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர். பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இக்னைட் டிரஸ்ட் மூலம் கடலூர் ஓயாசிஸ் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பராட்டுகள் குவிந்து வருகிறது.






