என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒப்படைப்பு"
- பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
- கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.
கோபி:
தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
- காகா கூட்டம் ஆந்தையை கொத்தி கொல்ல முயன்றது.
- உடனடியாக வனத்துறையினரை அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.
உடன்குடி:
உடன்குடி சிவலுரில் விஜயன் என்பவரது வீட்டுக்கு கூரையில் நேற்று ஒரு அரியவகை ஆந்தை சிக்கி கிடந்தது.
இதைப் பார்த்த காகா கூட்டம் அதனை கொத்தி கொல்ல முயன்றது. இதைப்பார்த்த விஜயன் காக்கையிடம் இருந்து காப்பாற்றி சாதுர்யமாக ஆந்தையை பிடித்தார்.
இவரது அண்ணன் ஆசிரியர் ஜெயராஜ் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வீடியோ மூலம் அது வைரலானது. உடனடியாக நாசரேத் அருகில் உள்ள கச்சினா விலை வனத்துறை அலுவலர் கனிமொழி இதை பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினரை அனுப்பி அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது களஞ்சிய ஆந்தை என்றும். பகலில் இதன் செயல்பாடு இல்லாததால் பகலில் காக்கை உட்பட மற்ற பறவைகள் இதனை ஓட ஓட விரட்டும் என்றும் இரவில் இந்த களஞ்சிய ஆந்தைக்கு நன்றாக கண் தெரியும் என்றும். மற்ற பறவைகளை இது இரவில் ஓட ஓட விரட்டும் என்றும் கூறினர்.
- திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.
- காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.சம்பவத்தன்று அதன் அருகில் உள்ள மரத்தில் இருந்து அரிய வகை பறவை ஒன்று தவறி கீழே விழுந்து கத்தியது. இதையடுத்து அங்கிருந்த நிறுவன ஊழியர்கள் அதை மீட்டனர்.
அப்போது அது அரிய வகை ஆந்தை என்பதும் காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது. அந்த ஆந்தை எங்கிருந்து வந்தது?, அது எப்படி காயம் அடைந்தது? அல்லது யாராவது வேட்டையாட முற்பட்டனரா? என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் இதுகுறித்து உடுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் அந்த அரிய வகை ஆந்தையை மீட்டுச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள ஏ.மணி நகரில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக வீதியில் சுற்றித்திரிந்தார். இதனால்அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்த ஆடைகளை அவருக்கு அணிவிக்க முயன்றனர். அதை அணியாமல் நிர்வாணமாகவே மூதாட்டி சுற்றி திரிந்தார்.
தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர். பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இக்னைட் டிரஸ்ட் மூலம் கடலூர் ஓயாசிஸ் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பராட்டுகள் குவிந்து வருகிறது.
- சரோஜா வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது.
- மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 60). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தார்.
அந்த சமயத்தில், அவர் வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது. இது குறித்து அவர் சந்தை நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) என்கிற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அதனை உதவி நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் மூதாட்டி சரோஜாவிடம் ஒப்படைத்தனர். கூலித் தொழிலாளியின் இந்த நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாம்பாக்கத் திலிருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரது லேப்டாப் பேக் தவறி விழுந்து விட்டது. அதில் ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் வீடியோ கேமரா இருந்தது.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் அந்த சாலையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அதன்படி சாலையோரம் கிடந்த லேப்டாப் பேகை போலீசார் கண்டறிந்தனர். அதனை என்ஜீனியர் பாலாஜியிடம் பண்ருட்டி போலீசார் ஓப்படைத்தனர்.
- பெரம்பலூர் நான்கு ரோட்டில் தவறவிட்ட மணி பர்ஸ் உரிய நபரிடம் ஒப்படைத்த எஸ்.ஐ.
- மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவர் எஸ்ஐக்கு நனறி கூறினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் டிராபிக் எஸ்ஐ வரதராஜன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்த அவர், அந்த மணிபர்சில் உள்ளே 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 70 குவைத் தினார், ஆதார், பேன் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிலிருந்து செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது அந்த மணிபர்ஸ் பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்தைசேர்ந்த கிஷோர் குமார் என்ற மாணவர் டூவிலரில் சென்றபோது தவறவிட்டுவிட்டார் என தெரியவந்தது. அவரை வரவழைத்த எஸ்ஐ வரதாராஜன் மணிபர்சை ஒப்படைத்தார். மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்ஐ வரதராஜன் மற்றும் ஊர்க்காவல் படை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்
- கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு கருணை இல்லத்தில் வைத்து மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குணமடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 33) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நித்தினின் தங்கை குசுமா நாராயணரெட்டி பெரம்பலூருக்கு வந்தார். அவரிடம் நித்தினை போலீசாரும், கருணை இல்ல நிர்வாகிகளும் ஒப்படைத்தனர். அவர்களுக்கு குசுமா நாராயணரெட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்.
- கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
- கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.
கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.
இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.
- கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவலாளி போலீசில் ஒப்படைத்தார்.
- குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.
- செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, மயிலா டுதுறை மாவட்ட எல்லை க்குள் காணாமல் போன செல்போன்களை கண்டறிந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில், சைபர் கிரைம் காவல் அய்வாளர் புயல் பாலச்சந்திரன், தலைமை காவலர் சுதாகர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்க ப்பட்டன.
இைதயடுத்து, எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பற்றப்பட்ட செல்போ ன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஒப்படைத்தார்.
இதனால் செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கீதா (வயது 22). இவர் வேலைக்கு செல்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த கீதா, திருடன் திருடன் என கத்தியதால் அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சீர்காழி தாண்ராசன்குப்பம் சேர்ந்தராம்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்