search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "extradition"

  • இறுதிக்கட்ட விசாரணையின்போது, ஒடோனியல் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்
  • ஒடோனியலை பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும் என கொலம்பிய அதிபர் கருத்து

  கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

  அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகா. இவர் இத்தொழிலில் வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

  அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல டன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.40 கோடி ($5 மில்லியன்) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

  ஒடோனியல் தனது எதிரிகளை கொல்ல இரக்கமின்றி உத்தரவிட்டார். மேலும் பலரை சித்ரவதை செய்துள்ளார். ஒருவரை உயிருடன் புதைத்தார். பொது மக்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

  போலீஸ் தாக்குதலில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு நாள் முழுவதும், "வீட்டிலேயே இருங்கள் அல்லது உயிரை இழப்பீர்கள்" என பொதுமக்களுக்கு உத்தரவிட்டு விட்டு காவல்துறையினரை கொல்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து அவர்களை வேட்டையாடினார்.

  இந்நிலையில், 2021ம் வருடம், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறுதியாக அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார்.

  அதன்பின்னர், கொலம்பியாவில் இருந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. கொலம்பியாவுடன், 'நாடு கடத்தல்' நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியபோது, ஒரு நிபந்தனையாக அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்க வக்கீல் கோர வேண்டாம் என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

  அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

  கொலம்பிய அதிபர் இவான் டுக், ஒடோனியலை குறித்து கூறியதாவது:

  ஒடோனியலை, போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும். அவர் உலகின் மிகவும் ஆபத்தான கடத்தல்காரர் மட்டுமல்ல, பல சமூக தலைவர்களை கொலை செய்தவர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரை துஷ்பிரயோகம் செய்தவர். மேலும், பல காவல்துறையினரை கொன்றவர்.

  இவ்வாறு அதிபர் டுக் தெரிவித்தார்.

  • டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
  • ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

  வாஷிங்டன்:

  மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

  தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.

  • திருஞானம் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது.
  • போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

  கடலூர்:

  சிதம்பரத்தில் தவறவிட்ட நகையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார். அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.  சிதம்பரம் உசூப்பூர் சபாநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் திருஞானம் (வயது 56). இவர் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருஞானம் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்படி, சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

  அதில் அடையாளம் தெரியாத பெண் கீழே விழுந்த நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் பின்னலூரைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. அப்பெண் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்டு தவறவிட்ட திருஞானத்திடம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நகையை ஒப்படைத்தனர்.

  • முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
  • குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

  இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம் என்று லண்டனில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா கூறினார். #VijayMallya #VijayMallyaextradition
  லண்டன்:

  விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி லண்டன் நகரில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  அப்போது அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார்.  இந்தநிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல் முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. எனினும் தனது அடுத்த திட்டம் என்ன என்பதை அவர் இதுவரை உறுதி செய்யவில்லை. #VijayMallya #VijayMallyaextradition
  விஜய் மல்லையா விவகாரத்தில் எல்லா பெருமையும் பிரதமர் மோடியை சேரும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். #VijayMallya #NarendraModi #AmitShah
  புதுடெல்லி:

  தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

  இந்த தீர்ப்பு ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும் அம்சமாக அமைந்து உள்ளது. இதன் அத்தனை பெருமையும் பிரதமர் மோடியையே சேரும்.

  அவருடைய நடவடிக்கையால்தான் இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை விசாரணை முகமைகள் இடைவிடாமல் தேடுதல் வேட்டை நடத்தி அதில் வெற்றியையும் உறுதி செய்துள்ளன. இதன் மூலம் ஊழலுக்கும், ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #VijayMallya #NarendraModi #AmitShah
  வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லயாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
  லண்டன்:

  இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

  இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

  இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

  இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

  விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 

  இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

  இந்த வழக்கில் நாளை இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் எனவும், நாளைய தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர். #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக துபாயில் வசிக்கும் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது. #ChristianMichel #Dubai #India #HelicopterDeal
  துபாய்:

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக இந்திய விமானப்படைக்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ.423 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

  இதில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் (வயது 54) கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்.

  இவரை விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு இந்திய அரசின் சார்பில் துபாய் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக துபாய் துறைமுக பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

  இதன் அடிப்படையில் துபாய் மேல் நிலை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதமே அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  இதுகுறித்த முறையான அறிவிப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜேம்ஸ் மைக்கேல் தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதை மறுபடியும் விசாரித்த துபாய் நீதிமன்றம், ஜேம்ஸ் மைக்கேலை நாடுகடத்தும் உத்தரவுக்கான அறிக்கையை அளித்தது.

  சர்வதேச விவகாரம் என்பதால் துபாய் அரசும், ஜேம்ஸ் மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதனை அடுத்து இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பில் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  மைக்கேல் வந்த விமானம், நேற்று இரவு 10.35 மணிக்கு டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அங்கு மைக்கேலை சி.பி.ஐ. முறைப்படி கைது செய்தது. #ChristianMichel #Dubai #India #HelicopterDeal
  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யபட்ட கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AgustaWestland #AgustaWestlandScam
  புதுடெல்லி:

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

  பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

  இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பில் தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

  இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ-யும், 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.   அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், 2008-ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில், மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கிறிஸ்டியன் மைக்கேல் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால், அவர் இந்தியா கொண்டு வரப்பட்டால், இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என நம்பப்படுகிறது. #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel