என் மலர்
நீங்கள் தேடியது "vijay mallya"
- அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
- அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை.
அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் நடவடிக்கை மும்பை தனிக்கோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா தரப்பில் மும்பை ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
உடனே அவர் தரப்பில் 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்காத நிலையில், விஜய் மல்லையாவை 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மும்பை தனிக்கோர்ட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.
இப்படி அறிவிக்கிறபோது, அவரது சொத்துகளை பறிமுதல் செய்கிற அதிகாரம், வழக்கு தொடுக்கிற புலனாய்வு அமைப்புக்கு வந்து விடுகிறது.
இந்த நிலையில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக தான் விஜய் மல்லையாவிடம் இருந்து எந்த அறிவுறுத்தல்களையும் பெறவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
புதுடெல்லி:
பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார்.
இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய் மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2020-ம்ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் அவர் கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு பலமுறை வாய்ப்பளித்தது. ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.
இந்த வழக்கு கடந்த மார்ச் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி லலித் தலைமையிலான பெஞ்ச் விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது.
அதில், கோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல் விஜய் மல்லையா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ரூ.317 கோடியை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும். அத்தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இவர்கள் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் சொத்துக்களில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.335 கோடியே 6 லட்சம் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துகளை விற்று ரூ.7,975.27 கோடியை ஈட்டி உள்ளது.

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இதன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை இந்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடி கொடுத்து உதவிகரம் நீட்டியது. ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு இவ்வாறு வஞ்சனை செய்கிறது. பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி செயல்படதான் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். #JetAirways #VijayMallya
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.

அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.
அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-
விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #VijayMallya #NiravModi #EnforcementDirectorate

இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அவரது ஜாமீன் மனு 2-வது முறையாக நேற்று முன்தினமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வக்கீல், ‘ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என இளகிய மனதுடன் கேட்டார்.
முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோர் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகன் இருப்பதாகவும், அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் கோர்ட்டில் கூறிய அவரது வக்கீல் கிளேர் மோண்ட்கோமெரி, எனவே அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.
இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NiravModi #VijayMallya