என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: கோப்பையை வென்ற ஆர்சிபி- கண்கலங்கி கொண்டாடிய விஜய் மல்லையா மகன்
- ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அந்த அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை அந்த பேரணி நடைபெறும்.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியை முன்னாள் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா நேற்று டிவி-யில் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கண்கலங்கி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story






