என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"

    • தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
    • இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.

    எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை, நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'கேரள மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதால் இதுபோன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருகிறது என்று இந்த மனுவை தாக்கல் செய்கிறீர்கள். எனவே இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதை விசாரித்த ஐகோர்ட், வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.

    புதுடெல்லி:

    அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது.

    அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு. வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.

    இதைத்தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரிக்க நீதிபதிகள் சஞ்சய் குமார், வினோத் சந்திரன் அமர்வு, பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.

    அத்துடன் 2 வீடுகளின் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

    அத்துடன் வீடு வாங்கியவர்களுக்கும் அபராதம் விதித்ததுடன், வீட்டில் இருந்து ஒரு மாதத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டனர்.

    முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் தன்னிச்சையானவை, பாரபட்சமானவை மற்றும் அமைப்பின் தகுதி அளவுகோல்களை மீறுவதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் மற்றும் சுயநலம் பாராட்டுதல் ஆகியவை ஒரு ஜனநாயக அமைப்புக்கு விரோதமானவை எனக்கூறிய நீதிபதிகள். அரசு சேவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமூகத்துக்குள் வெளிப்படையான ஒதுக்கீட்டின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    வீடுகளை ஒதுக்குவதில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் காட்டக்கூடாது என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் பாரபட்சம் மற்றும் சுயநலமே மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    • கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    • கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் ஆலயத் தடை பாலின பாகுபாட்டிற்குச் சமம் என்றும் கூறியது.

    இதனை கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பக்தர்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை (16-ந்தேதி) பரிசீலிக்க உள்ளது. இதே போல் கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது. அப்போது கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

    இந்த விவகாரம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இடது சாரி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் கேட்டபோது, கட்சியின் தலைமையால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. அதே நேரத்தில், பக்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். மேலும் "இது ஒரு சிக்கலான வழக்கு. தேவைப்படும்போது இந்த விஷயத்தில் சி.பி.எம். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 51 பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததாக 2020 ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அரசாங்கம் 51 பெண்களின் பெயர்களையும், ஆதார் அட்டை மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். பெயர்களில் எதுவும் கேரளாவைச் சேர்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேரு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
    • சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு நேரு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    நிர்வாகத்துறை, நீதித்துறை இடையிலான உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. 1959, ஜூன் 26 அன்று அப்போதைய பிரதமர் நேரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு எழுதிய ஒரு அசாதாரண மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள அவர், நேரு சிறந்த நிறுவன கட்டமைப்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் நேரு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த பல நாட்களாக நான் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு எழுதுவது எனது நோக்கமாக இருந்தது. ஆனால் எனது பயணம் காரணமாக, என்னால் அதை செய்ய முடியவில்லை. கல்கத்தா வழக்கறிஞர் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.

    அதில் உங்களைப் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பியிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கருத்துக்கள் முறையற்றவை என்பதை நான் உணர்கிறேன். என்னிடம் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் வேறு பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நான் செய்த இந்தச் செயலுக்கு நீங்கள் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என எழுதியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.
    • முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார்.

    அங்கிருந்த சிகையலங்கார நிபுணரிடம் முடியை 4 அங்குலம் குறைக்கும்படி கூறி உள்ளார். ஆனால் சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.

    முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஆணையம், ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓட்டல் நிர்வாகம் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கினால் போதும்' என உத்தரவிட்டது.

    • ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது.
    • இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    பாட்னா:

    பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஜே.டி.யூ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பீகார் அரசாங்கத்தின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நலத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் பீகாரில் புதிய தேர்தல்களை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜன சுராஜ் கட்சியின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இந்த நீதித்துறை மேடையைப் பயன்படுத்துகிறீர்களா? என்றார்.

    • விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.
    • சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. கட்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.

    சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
    • இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.

    அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

    எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.

    இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம்.
    • மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.

    டெல்லி ஜகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது வீட்டில் கட்டு கட்டாக பண குவியல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் மறுத்தார். இச்சம்பவம் தொடர்பாக யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

    நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 எம்.பிக்கள் கையெழுத்திட்டு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் அமைத்தார். இதே தீர்மானம் மேல்-சபையில் நிராகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே தன்னை நீக்குவதற்கான தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பாராளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ந்தேதி ஒத்திவைத்தது.

    இந்த நிலையில், மக்களவை சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    இதில் யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்-சபையின் துணைத் தலைவருக்கு ஒரு தீர்மானத்தை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்றும், 1968-ம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், சபாநாயகர் மற்றும் தலைவருக்கு மட்டுமே ஒரு நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

    • 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை
    • 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

    இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.

    • 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
    • மேல்முறையீட்டின் போது தங்களது தரப்பு பாதிப்புகளை எடுத்து கூறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது அடுத்த கட்ட ஆயத்த பணிகளை பட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து படக்குழுவினர் கூறும் போது, பொங்கலுக்கு விஜயின் 'ஜன நாயகன்' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் . விநியோகஸ்தர்கள் மற்றும் பட அதிபர்களின் நிலையை கருத்தில் கொண்டும், தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களை தவிர்க்கும் வகையிலும் 'ஜன நாயகன்' படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில் தங்களது தரப்பு பாதிப்புகளை படக்குழு விரிவாக கூறியுள்ளது. 

    ×