என் மலர்

  நீங்கள் தேடியது "Delhi HC"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
  • ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

  புதுடெல்லி:

  மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

  மேலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

  இது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. முன்ஜாமீன் காலத்தில் 2 பேரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டன.

  இந்நிலையில் அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
  புதுடெல்லி:

  கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம், 2015-ம் ஆண்டு ஜூலை 1 முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் கவுதம் கெய்தான் மீது கருப்பு பண ஒழிப்பு சட்ட வழக்கு பாய்ந்தது.

  இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கவுதம் கெய்தான் மனு தாக்கல் செய்தார். கருப்பு பண ஒழிப்பு சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தியதை அனுமதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கெய்தான் மீதான நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்தது.

  இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அம்மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவு, இதுபோன்ற மற்ற வழக்குகளையும் பாதிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். கவுதம் கெய்தானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிடிவி தினகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran
  புதுடெல்லி:

  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  அதன்பின்னர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.

  இந்த ஆடியோக்கள்  ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

  இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #TTVDhinakaran
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. #DelhiHC #ADMK
  புதுடெல்லி:

  அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.  ஆனால், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #DelhiHC #ADMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
  புதுடெல்லி:

  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

  இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

  பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

  இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

  இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.  இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

  மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. #DoubleLeafSymbol
  புதுடெல்லி:

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

  எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

  இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். #DoubleLeafSymbol

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #Doubleleafsymbol
  புதுடெல்லி:

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

  டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் மற்றும் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் தங்கள் இறுதி சுற்று வாதங்களை முன்வைத்தனர்.

  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு எழுத்துபூர்வ வாதங்களை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

  டி.டி.வி.தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் கோரும் வழக்கின் மீது நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Doubleleafsymbol

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனித உரிமையை மீறி தாக்கியதாக தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் புகார் தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட்டு தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt
  புதுடெல்லி:

  டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் மனித உரிமையை மீறி தாக்கியதாக புகார் செய்திருந்தனர்.

  இது தொடர்பாக திகார் ஜெயிலில் மிக பாதுகாப்பு வார்டில் உள்ள 15 கைதிகள் தங்களை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் தாக்கினர் என்றும், சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடப்பதாகவும், மனித கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறி கடிதம் எழுதி இருந்தார்கள்.

  இதையடுத்து கைதிகள் கடிதத்தை அடிப்படையாக வைத்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

  அப்போது நீதிபதிகள், திகார் ஜெயில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசின் விளக்கத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் சிறைத்துறை இயக்குனர், தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

  அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #DelhiHighCourt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
  புதுடெல்லி:

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.  இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுனந்தா புஷ்கர் மர்மச்சாவில் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC
  புதுடெல்லி:

  முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 17-ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இது தொடர்பான வழக்கில், சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்த நிலையில், அவர் சம்மன் பிறப்பித்த டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகவில்லை. மாறாக, டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டார்.  இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வக்கீல், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா, நேற்று விசாரித்தார். அவர் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print