என் மலர்

  நீங்கள் தேடியது "Bajrang Punia"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
  • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

  நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

  இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

  காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


  மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


  முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
  • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  பிரிட்டன்:

  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

  இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

  இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக மல்யுத்தம் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரரான பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #BajrangPunia
  இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 65 கிலோ எடைப்பிரிவில் சமீப காலமாக சிறப்பான வகையில் சண்டையிட்டு வருகிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

  பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
  புடாபெஸ்ட்:

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.

  இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்தார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  உலக மல்யுத்தத்தில் இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Semifinal
  புடாபெஸ்ட்:

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ரோமன் அஷாரினையும் (ஹங்கேரி), 2-வது சுற்றில் லீ சியங்கையும் (தென்கொரியா), கால்இறுதியில் துல்கா துமர் ஒசிரையும் (மங்கோலியா) விரட்டினார்.

  அதைத் தொடர்ந்து அரைஇறுதியில் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை (கியூபா) 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரவரிசை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார். #BajrangPunia
  உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட்டில் நடக்கிறது. இதுவரை இதுபோன்ற தொடர்களில் மோதும் வீரர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரநிலை வழங்கப்படும்.

  ஆனால் தற்போது வீரர்களின் வெற்றித் தோல்வி ஆகியவற்றை கணக்கில் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரநிலை வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (65 கிலோ எடைப்பிரிவு) 45 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

  இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் தரிநிலைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். துருக்கி வீரர் செலாகட்டின் 50 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ரஷியா வீரர் பெக்புலாட்டோவ் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.

  பஜ்ரங் புனியா சமீப காலமாக சிறப்பான விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேல் ரத்னா விருது தராத அதிருப்தியில் பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை இன்று சந்திக்க உள்ளதாகவும் தனக்கு சாதகமான முடிவு வரவில்லை எனில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
  விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.  இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிருப்தி தெரிவித்தார்.

  கேல்ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால் அவர் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

  இது தொடர்பாக அவர் நேற்று பேட்டியளித்த போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை இன்று சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் பஜ்ரங் புனியாவை நேற்று மாலை மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் சந்தித்து பேசினார்.

  இது தொடர்பாக பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

  மத்திய மந்திரியை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் நேற்று மாலையே அவரை சந்திக்க அழைப்பு வந்தது.  அப்போது கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என்றேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு.

  விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  இவ்விவகாரத்தை கவனிப்பதாக மத்திய மந்திரி கூறி உள்ளார்.

  இன்று மாலை வரை அரசின் பதிலுக்காக காத்து இருப்பேன். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. #AsiansGames2018 #BajrangPunia
  சண்டிகர்:
     
  ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

  இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

  இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

  மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #BajrangPunia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதல் தங்கம் பதக்கத்தை வென்றுள்ளார். #AsiansGames2018
  ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

  இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை எதிர்கொண்டார். 11-8 என ஜப்பான் வீரரை வீழ்த்தி பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.  முதலில் பஜ்ரங் புனியா 6-4 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 6-6 என சமநிலைப் பெற்றார். பின்னர் 8-6 என முன்னிலைப் பெற்று இறுதியில் 11-8 என வெற்றி பெற்றார்.

  சுஷில் குமார், மயுசம் காத்ரி, சந்தீப் தோமர் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. அவர்களை வீழ்த்தியவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறாததால் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AsianGames2018
  ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் அண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

  சுஷில் குமார், மயுசம் காத்ரி, சந்தீப் தோமர் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. அவர்களை வீழ்த்தியவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறாததால் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்தனர்.

  86 கிலோ எடைப்பிரிவில் பவன் குமார் ரீபேக்கேஜ் பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த சுற்றில் வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் வெல்வார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருக்கில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்தம் தொடரில் இந்தியாவின் பஜ்ரங், புனியாக தங்கப்பதக்கம் வென்றனர். #BajrangPunia
  துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி உக்ரைனின் ஒல்கா ஷ்னைடரை எதிர்கொண்டார். இதில் பிங்கி 6-3 என வெற்றி தங்கப்பதக்கம் வென்றார்.

  ஆனால் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் 62 கிலோ எடைப்பிரிவில் ஏமாற்றம் அடைந்தனர்.

  ஆண்களில் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். 70 கிலோ எடைப்பிரிவில் அவருன் மோதக்கூடிய வீரர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால், போட்டியிடாமல் வெற்றி பெற்றார். இந்த தொடரில் இந்தியா மொதம் 10 பதக்கங்களை கைப்பற்றியது. இதில் பெண்கள் ஏழு பதக்கங்களை வென்றனர்.
  ×