என் மலர்
நீங்கள் தேடியது "WFI"
- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
- தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சுவிட்சர்லாந்து:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
- ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
- பிரிஜ் பூஷன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் குமார் சிங் (உத்தர பிரதேசம்) மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன் ஆகியோர் உள்ளனர்.
துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் கர்தார் சிங் போட்டியிடுகிறார். இவர் ஆசிய போட்டிகளில் இரணடு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.
இவர் தவிர அசித் குமா சகா(மேற்கு வங்காளம்), ஜெய் பிரகாஷ் (டெல்லி), மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்), என்.போனி (மணிப்பூர்) ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இதேபோல் 2 இணை செயலாளர் பதவிகளுக்கு 4 பேரும், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் போட்டியிடுகிறார்கள். பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 5 முக்கிய பதவிகளுக்கான போட்டியில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
- போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.
கோண்டா:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.