search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்: பிரிஜ்பூஷன் சிங் உறவினர் தலைவராக தேர்வு
    X

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்: பிரிஜ்பூஷன் சிங் உறவினர் தலைவராக தேர்வு

    • இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைநகர் டெல்லியில் 2 மாதத்தும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

    இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும். 21-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×