search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சஞ்சய் சிங் தான் பிரச்சனையே தவிர இந்திய மல்யுத்த சம்மேளனம் அல்ல: சாக்ஷி மாலிக்
    X

    சஞ்சய் சிங் தான் பிரச்சனையே தவிர இந்திய மல்யுத்த சம்மேளனம் அல்ல: சாக்ஷி மாலிக்

    • ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    Next Story
    ×