search icon
என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் அடைப்பு.
    • மதுக்கடைகள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (17-ந் தேதி) நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென ஆய்வு.
    • உடனடியாக படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

    இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது எழிலரசன் எம்.எல்.ஏ. கூறும்போது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்து புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை.

    காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மருத்துவக் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

    • தங்கத்தேரில் 8 கருடன்கள், 16 கந்தர்வர்கள், சூரிய பகவான் 2 குதிரைகள் உள்ளிட்ட அழகிய வடிவிலான சிலைகளையும் பொருத்தி உள்ளனர்.
    • பழமையை மாற்றாமல் 23 அடி உயரத்துடனும் 3½ டன் எடையுடன் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் 75 நாட்களில் தயார் செய்து முடித்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் தயாராகி அமெரிக்கா செல்லும் தங்கத்தேர்காஞ்சிபுரம்:

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் செயல்படும் ராஜா ஆன்மிகம் எனும் தனியார் நிறுவனம் கோவில்களுக்கு தேவையான வாகனம், கொடிமரம் தங்க வெள்ளி கவசங்கள், பஞ்சலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் மேளதாளங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, உள்நாடு, வெளிநாடு, கோவில்களுக்கு விற்பனை செய்கிறது.

    இந்த தனியார் நிறுவனத்திடம் அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த சியாட்டின் நகரத்தின் அருகில் ரெட்மண்டில் அமைந்துள்ள வேதிக் கோவில் நிர்வாகம் தங்கத்தேர் ஒன்றை செய்து தரும்படி கேட்டுக்கொண்டது.

    அதன்படி முதல் முறையாக ராஜா ஆன்மிகம் நிறுவனம் மரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இரும்பு ஆங்கிள்களை பயன்படுத்தியும் 6 பகுதிகளாக பிரித்து எடுத்து செல்லும் வகையில் செப்பு தகடுகளில் சிற்பங்களை செதுக்கி தங்க முலாம் பூசி, தங்கத்தேரை செய்து முடித்துள்ளது.

    தங்கத்தேரில் 8 கருடன்கள், 16 கந்தர்வர்கள், சூரிய பகவான் 2 குதிரைகள் உள்ளிட்ட அழகிய வடிவிலான சிலைகளையும் பொருத்தி உள்ளனர்.

    பழமையை மாற்றாமல் 23 அடி உயரத்துடனும் 3½ டன் எடையுடன் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் 75 நாட்களில் தயார் செய்து முடித்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் 6 பகுதிகளாக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பும் பணி நடைபெறுவதாக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    • கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

    கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.

    கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என 4 திவ்ய தேச சன்னதிகள் அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்தது.

    இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரணவல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

    இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 6 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்கா வலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, பேரகத்தி பட்டர் ரகுராம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    • ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
    • இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

    தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
    • இதில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில், பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.

    விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.

    காஞ்சிபுரம்

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.

    இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.

    இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.

    • சில நாட்களில் மார்க்கெட் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மேற் கூரை ஆபத்தான நிலையில் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான ராஜாஜி மார்க்கெட்டில் புதிய கட்டிடம் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்னும் சில நாட்களில் மார்க்கெட் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள ராஜாஜி மார்க்கெட்டின் சுவற்றில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பது வியாபாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    மேலும் சில இடங்களில் தூண்கள் உடைந்து அதன் மீது மேற் கூரை ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கும் பகுதி மற்றும் உடைந்த பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அங்குள்ள கழிப்பறை மற்றும் உணவகம் அருகருகே அமைக்கப்பட்டு இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ×