search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holiday For Schools"

    கனமழை காரணாக நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRain #SchoolHoliday #RedAlert
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



    திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில்  பள்ளி,  கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
    புதுவையில் பெய்து வரும் கனமழையால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #Rain #puducherryRain #HolidayForSchools
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதத்திற்கு பிறகும் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்தது.

    புதுவையில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கோடை காலத்திற்கு நிகரான வெயில் அடித்தது. வழக்கமாக இந்த மாதங்களில் புதுவையில் காற்று வீசும், தென் மேற்கு பருவ மழை பெய்யும்.

    ஆனால், ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான மழை பெய்தது. பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலே அடித்தது. இதனால், செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையாவது பெய்யுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதும் கோடை வெயிலை விட கூடுதலான உக்கிரத்துடன் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    அக்டோபர் மாதத்தின் தொடக்க நாட்களிலும் வெயிலின் தாக்கமே இருந்தது. இதே நிலையே நேற்றும் நீடித்தது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் பருவம் மாற தொடங்கியது.

    வானில் கருமேகங்கள் தென்பட தொடங்கியது. லேசான குளிர்ந்த காற்றும் வீச தொடங்கியது. ஆனால், மழை பெய்யவில்லை. இரவு 10 மணிக்கு மேல் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    இரவு முழுவதும் அவ்வப்போது லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. அதிகாலை 4 மணியளவில் மழையின் வேகம் கூடியது. கனமழை பெய்ய தொடங்கியது.

    தொர்ந்து காலை 6 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து லேசான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்த வண்ணம் உள்ளது. இதே நிலையே புதுவையின் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நிலவுகிறது.

    மழை காரணமாக நகரத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க தொடங்கி உள்ளது. சிவாஜி சிலை பகுதியில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் இந்திராகாந்தி சிலை, புஸ்சி சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காலை 8.15 மணிக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று விட்டனர். பள்ளி சென்ற மாணவர்கள் மீண்டும் வீடு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகினர். #Rain #puducherryRain #HolidayForSchools
    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #Rain #TamilNaduRain #HolidayForSchools
    சென்னை:

    லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  

    சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    அதேபோல்,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய  மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.



    சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

    காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  #Rain #TamilNaduRain #HolidayForSchools
    கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #HeavyRain #HolidayForSchools
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.  #HeavyRain #HolidayForSchools

    கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார்.#RainInKovai #HolidayForSchools
    கோயம்புத்தூர் :

    தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  

    கனமழையினால் கோவை மாவட்டம், பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.

    கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார்.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக மரங்கள் விழுந்துள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #RainInKovai #HolidayForSchools
    ×