search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Alert"

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை.
    • அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

    • சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    மிச்சாங் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களைத் தொடர்ந்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
    • சபரிமலையில் கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். தற்போது அங்கு கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

    மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதன்படி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.
    • கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களில் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கன மழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என கருதப்படுவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.

    கனமழை மற்றும் காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம் திட்டாவில் 3 வீடுகளும் இடிந்தன. அங்கு வசித்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால், எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலை பகுதிகளில் மக்கள் குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே காசர்கோடு அருகே மழைக்கு மரம் சாய்ந்ததில் மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். காசர்கோடு மாவட்டம் புத்திகே அருகே உள்ள அங்காடி மோகர் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மனைவி பாத்திமா சைனப். இவர்களுது மகள் ஆயிஷாத் மின்கா (வயது 11). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற ஒரு மரம் காற்றில் முறிந்து விழுந்தது. அதன் கிளை ஆயிஷாத் மின்கா மீது விழுந்தது. இதனை கண்ட சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு நின்றவர்கள் மரக்கிளைகளை அகற்றி ஆயிஷாத் மின்காவை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆயிஷாத் மின்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை குறித்து மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடுக்கி, பத்தனம் திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • வடமாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக , பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .

    மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இப்பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக உள்ளது. இந்த வருடம் முழுவதும் பரவாலாக மழை பொழிவதால் மரக்காணம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள மரக்காணம் பகுதி விவசாயிகள் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் முதல் 30 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கதிர்வந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் முழ்கினர்.

    • விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இங்கு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்யவும், நிவாரணப் பணிகளை பார்வையிடவும் இன்று காலை விழுப்புரம் கலெக்டர் மோகன் கோட்டக்குப்பம் பகுதிக்கு அதிகாரிகளுடன் வந்தார். அங்கு பிள்ளைச்சாவடி குப்பத்தில் கடல் சீற்றத்தால் முழ்கும் நிலையில் உள்ள மீனவர் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார். அப்பகு தியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமினை பார்வையிட்டு, கடலோ ரத்தில் யாரும் வசிக்க வேண்டாம், முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருங்கள். அங்கு உணவு, குடிநீர், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று பொது மக்களிடம் கூறினார்.

    இதைத் தொடர்ந்து மரக்காணம் தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் மோகன் சென்றார். புயலை எதிர்கொள்வது குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரைைய கடக்கும் என்பதால் கடற்கரையோர அனைத்து கிராம மக்களையும் முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப் பணித்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர்.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும். புயலாக மாறினால் மாண்டாஸ் என புயலுக்கு பெயர் வைக்கப்பட உள்ளது . இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்‌. அதனை மீறி ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றதும் குறிப்பிடத்தக்கது‌.

    மேலும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முழுவதும் சுமார் 30 அடி முதல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தில் டிராக்டர்கள் மூலமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் என மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 1 - ம் எண் தூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌. இதன் மூலம் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் நகர்நது வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நவம்பர் 12-13ம் தேதிகளில் தமிழகம்- புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது.

    இதன் எதிரொலியால், வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து 16 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும்,  தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. கனமழை நீடிப்பு- சென்னையில் 3 இடங்களில் போக்குவரத்து மாற்றம்
    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

    இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலமாக மாறும்பட்சத்தில், வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், இன்று அதி கனமழை பெய்யும் என்பதால், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

    ×