என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்
- நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story






