என் மலர்
நீங்கள் தேடியது "Schools Holiday"
- அரியாங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
- இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுவை:
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேரோட்டம் நாளை காலை 8 மணியளவில் நடக்கிறது.
இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர்.
விழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
- கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் கனமழையின் காரணமாக குடகு, உத்திர கன்னடா, சிக்கமங்களூரு, தக்சின கன்னடா, பெலகாவி, ஹாசன், தார்வாட், தாவண்கரே உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்கமங்களூரு, மைசூரு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. ஹாரங்கி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 20 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், இன்று காலை முதல் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் மாண்டி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிம்லா:
வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் லஹால் மற்றும் ஸ்பிடி நகரில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டது.
ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கிச் சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அங்குள்ள மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாண்டி நகர துணை காவல் ஆணையாளர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்தார்.
- சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதை தடுக்க இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
- கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3- தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மணிப்பூரில் ஜூலை 5-ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
- திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
- அங்கு அனைத்து அரசு பள்ளிகளும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மூடப்படுகிறது.
அகர்தலா:
இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
ஏற்கனவே, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மழையால் திருவாரூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதற்கிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து 9-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.
- பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
- மழை காரணமாக அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.