என் மலர்
புதுச்சேரி

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கு தெரியுமா?
- டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






