சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போத ரெட் அலர்ட்.
சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com