என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள் விடுமுறை."

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவள்ளூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. பல வீடுகள், குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியதால், பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், தெற்கு வங்காள மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் விமான நிலையை விமான நிறுவனத்தின் செயலி அல்லது வலைதளம் மூலம் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அரசு விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
    • 11ம் தேதி தான் பள்ளிகளை திறக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகளை நாளை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் நாகராஜ முருகன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்,1" சென்னை உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் நாளை விடுமுறை ஆகும். வேலை நாள் கிடையாது. 11ம் தேதி தான் பள்ளிகளை திறக்க வேண்டும். சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்தால் மட்டுமே பள்ளிகளை நடத்த வேண்டும்" என்றார்

    அரசு விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.
    • அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் அதிகனமழைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/ Tirunelveli Tenkasi district Schools tomorrow Leave for Heavy rains

    வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்னும் பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தொடரந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    ×