என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை எக்காரணம் கொண்டும் பள்ளிகள் திறக்க கூடாது- தனியார் பள்ளிகளுக்கு அதிரடி அறிவிப்பு
- அரசு விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
- 11ம் தேதி தான் பள்ளிகளை திறக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளை நாளை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் நாகராஜ முருகன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,1" சென்னை உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் நாளை விடுமுறை ஆகும். வேலை நாள் கிடையாது. 11ம் தேதி தான் பள்ளிகளை திறக்க வேண்டும். சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்தால் மட்டுமே பள்ளிகளை நடத்த வேண்டும்" என்றார்
அரசு விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






