search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school leave"

    • நெல்லை மாவட்டத்தில் 1 முதல 9 வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை.
    • தற்போது மழை பெய்து வருவதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்க முடிவு செய்யலாம் என செய்தி வெளியானது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், குளங்கள் உடைப்பால் பல கிராமங்ளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இன்னும் சில கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 9 பள்ளிகள் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் "நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வரச் சொல்லியோ, சிறப்பு வகுப்புகள் சொல்லியோ மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது" குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை.
    • தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தல்.

    திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

     கோப்புப்படம்

    விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும், சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாக வந்த புகார் அடிப்படையில் தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதோடு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • மாசிமக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
    • 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து. செய்யப்படுகிறது.

    டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.

    இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #TNRains #KanyaKumari #Ooty
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய, விடிய மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்றுமுன்தினம் நிரம்பியது. முதற்கட்டமாக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரசாந் மு வடநரே உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. எனினும், பிறை தெரிவதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ×