என் மலர்
நீங்கள் தேடியது "pollution"
- கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது
- இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
- 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து. செய்யப்படுகிறது.
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.
இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
- மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.
திருப்பூர் :
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலையில் பெரியபட்டி கிராமம், தாராபுரத்தில் சின்னமருதூர்,குருணைக்கல் பட்டி கிழக்கு வலசு ஆகிய பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் காற்றும் நீரும் மாசுபடுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய முடிவதில்லை.நீர்நிலைகளில் கரித்துகள்கள் படர்ந்துள்ளதால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாய நிலங்களில் இயங்கிவரும் இந்த ஆலைகளுக்கு, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் வாயிலாக 3முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீல் உடைத்து சட்டவிரோதமாக ஆலையை இயக்குகின்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறாமலும், ஊராட்சி கட்டட விதிப்படி உரிய கட்டுமான அனுமதி பெறாமல் விவசாய நிலத்தில் தடை செய்யப்பட்ட தொட்டி கரி சுடும் ஆலை இயக்குகின்றனர்.
8 ஆலைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவுக்குப் பின்னரும், 3 ஆலைகள் மட்டுமே இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 5 ஆலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் தொட்டி கரி ஆலைகளை உடனடியாக இடித்து அகற்ற மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமாள்மலை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழகம். கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கி றது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து முக்கிய சுற்றுலா தளங்களிலும் நகர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்லுவதால் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வரும் வன விலங்குகள் மற்றும் பசு மாடுகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது.
இதனால் விலங்குகளும் இறந்து விடுகின்றன மேலும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது.
2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சர்வேதேச சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என சுமார் 4 வருடத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
ஆனால் கொடைக் கானலில் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கின்றன.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த விட நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பிளாஸ்டிக் பைகளை கடையில் உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.
எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.
இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles