என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக அரசு"

    • ஒரு குறிப்பிட்ட அரசுத் துறை மட்டுமல்லாது, அந்த கிளையில் உள்ள அரியானா அரசின் பல கணக்குகளிலும் நடந்துள்ளது
    • ஒரு பைசாவை கூட விடமாட்டோம், அனைத்தும் மீட்கப்படும்.

    பாஜக ஆட்சியில் உள்ள அரியானாவில் மக்களின் பொதுப்பணம் ரூ. 590 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சண்டிகரில் உள்ள IDFC First Bank கிளையில் அரியானா அரசு நிறுவனங்களின் கணக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    அரியானா அரசுத் துறை ஒன்று தனது வங்கிக் கணக்கை மூடிவிட்டு, நிதியை வேறு வங்கிக்கு மாற்ற முயன்றபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆவணங்களில் காட்டப்பட்டத் தொகைக்கும், வங்கிக் கணக்கில் இருந்த உண்மையான இருப்புத் தொகைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.

    தற்போது வரை சுமார் ரூ.590 கோடி முறைகேடு நடந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு குறிப்பிட்ட அரசுத் துறை மட்டுமல்லாது, அந்த கிளையில் உள்ள அரியானா அரசின் பல கணக்குகளிலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    IDFC வங்கி வெளியிட்ட அறிக்கையில், "சண்டிகர் கிளையில் பணிபுரியும் சில ஊழியர்கள், பிற நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களை செய்துள்ளனர்.

    இது அரியானா அரசின் குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே நடந்துள்ளது. மற்ற வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

    இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து நேற்று (பிப்ரவரி 23) அரியானா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, இந்த மோசடி குறித்து அரசுக்கு ஏற்கனவே தெரிந்ததா என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த முதல்வர் நயாப் சிங் சைனி, "இது குறித்து மாநில ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் விஜிலென்ஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    ஒரு பைசாவை கூட விடமாட்டோம், அனைத்தும் மீட்கப்படும். வங்கி ஊழியராக இருந்தாலும் சரி, அரசு ஊழியராக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார். .

    இந்தச் சம்பவத்தை அடுத்து, அரசு தொடர்பான பணிகளை செய்ய அந்த வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

    • இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது.
    • தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக என தெரிவித்தார்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

    இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?

    தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

    தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஜீரோ"-வைத் திருப்பியளிப்போம்.

    தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக! என பதிவிட்டுள்ளார்.

    • தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
    • உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பட்டுள்ளன.

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார் மயமாக்கல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதும் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நவீனக் கல்வி முறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள தொய்வு போன்றவை அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

    பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.

    கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறையில் இருந்தும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வியை தரும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
    • அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா உள்ளார்.

    ரேகா ஆர்யாவின் கணவர் கிரிதாரி லால் சாஹுவும் பாஜகவில் முக்கிய தலைவர் ஆவார். அவர் பீகார் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கிரிதாரி லால் சாஹு கலந்து கொண்டார்.

    அப்போது அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய அவர், "உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.

    பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

    கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் மாநில பாஜகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    "பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்" என்று பீகார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "அவரது மனைவி பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போதே, அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது" என்று கூறி பீகார் மாநில மகளிர் ஆணையத் தலைவி அஸ்பரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கிரிதாரி லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    • பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
    • ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி ஊழல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.

    இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 90 நாட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே ஒர்க் ஸ்லிப் ஆகும்.

    இந்நிலையில் அரியானாவில் தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் நிதியைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    போலிப் பதிவுகளைக் கண்டறிய அனில் விஜ் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல மாவட்டங்களில் தகுதியற்றவர்களுக்குத் திட்டப் பயன்கள் சென்றடைந்தது தெரியவந்தது.  

    இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

    • யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது.
    • மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    இந்நிலையில் யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இப்படியே தொடர்ந்தால், டெல்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை (DSIIDC) மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் ப்ரிதம் சிங் அடங்கிய அமர்வு, DSIIDC தாக்கல் செய்த நிலை அறிக்கைகளில் உள்ள தாமதங்களைக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.

    ரூ. 2.5 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதும், எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டங்களும் இறுதி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    எனவே நிலுவையில் உள்ள ரூ. 2.5 கோடி நிதியை இரண்டு வாரங்களுக்குள் நிதியை விடுவிக்குமாறு DSIIDC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
    • சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கோரிக்கை

    ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.

    இந்நிலையில், ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " பலங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் 24 மணி நேர முயற்சிக்கு பின்பும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    ஒடிசாவில் கடந்த மாதம் கல்லூரியில் ஒரு இளம் பெண் (பேராசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .

    • கல்லூரியில் இளம் பெண் தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள் இது நடந்துள்ளது.
    • தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர்.

    ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.

    இந்நிலையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம்தலைவருமான நவீன் பட்நாயக் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பட்நாயக் தனது எக்ஸ் பதிவில், "பூரி மாவட்டத்தின் பாலங்கா பகுதியில் ஒரு இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி கொடூரமானது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    FM கல்லூரியில் ஒரு இளம் பெண் (ஆசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாகவும், கோபால்பூரில் நடந்த திகிலூட்டும் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் ஒடிசா முழுவதும் தினசரி பதிவாகின்றன. இவை தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் அல்ல. இந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து நடப்பது, ஆளும் அரசின் அமைப்புரீதியான தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.

    தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர், தண்டிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது.

    அரசு செயலற்ற தன்மையால் ஒடிசா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு செயல்படுமா? ஒடிசாவின் பெண்களும், சிறுமிகளும் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

    • ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
    • ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

    இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×