என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget 2026"

    • நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.
    • மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.

    இதனிடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    • நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
    • காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.

    இதனிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.

    அந்த வகையில் இன்று 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலையை அணிந்து உள்ளார்.

    பளபளப்பான பட்டு மற்றும் சிக்கலான கைவினைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.

     

    2019-ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது கைத்தறி புடவையை அணிந்து இருந்தார்.

     

    2020ம் ஆண்டு பட்டு சேலை

     2021-ம் ஆண்டு போச்சப்பள்ளி புடவை

     2022-ம் ஆண்டு ஒடிசாவின் போம்காய் புடவை.

     2023-ம் ஆண்டு கர்நாடகாவின் இல்கல்

     2024-ம் ஆண்டு மங்களகிரி பட்டு

     2024-ம் ஆண்டு இடைக்கால அமர்வுக்கு காந்தா எம்பிராய்டரி கொண்ட பட்டு சேலை

      2025-ம் ஆண்டு பத்மஸ்ரீவிருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த தந்தம் கொண்ட மதுபானி கையால் வரைந்த புடவையை அவர் அணிந்திருந்தார். 

    • தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
    • மதுரை எய்ம்ஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    Union Budget 2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?

    * விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி

    * கோவை, மதுரை மெட்ரோ ரெயில்,

    * தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,

    * புதிய ரெயில்வே திட்டங்கள்,

    * நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

    இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்ம்ஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம் என்று கூறியுள்ளார். 

    • ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
    • இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.

    அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    ×