ரெயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு- அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.
ரெயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு- அஸ்வினி வைஷ்ணவ்
Published on

------------------

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தமிழகத்திற்கு 2 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும்.

சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கம்.

சென்னை-ஐதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை- பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரெயில் இயக்கம்.

தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் ரெயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.

ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.

பெரும்பாலான ரெயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை.

மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சை-மன்னார்குடி ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com