என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railways"

    • ரெயில் 72 மணி நேரம் தாமதமாக வந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி
    • ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது

    அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரெயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மேலும் ரெயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், மேற்கூரை மற்றும் உடைந்த கதவு, ஜன்னல்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    BSF படையினருக்கு சிறப்பு ரெயில் என்ற பெயரில் மிக மோசமான நிலையில் உள்ள ரெயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
    • அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் இந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.

    ரெயில் பயணத்திற்கான உடனடி (Tatkal) டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையில்,

    IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.

    கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யும் போதும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது ஜூலை 15 முதல் முழுமையாக அமலுக்கு வரும்.

    அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், காலை 10:00 முதல் 10:30 வரை ஏசி டிக்கெட்டுகளையும், காலை 11:00 முதல் 11:30 வரை ஏசி அல்லாத டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் போலி பெயர்களில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.

    அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமானதால், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மேலும், ரெயில் பெட்டிகள் அழுக்காகவும், பாழடைந்ததாகவும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    திரிபுராவில் உள்ள உதய்பூர் ரெயில் நிலையத்தை ஜூன் 6-ம் தேதி வந்தடைய வேண்டிய இந்த ரயில், ஜூன் 9-ம் தேதி மாலை 6:30 மணிக்கே வந்து சேர்ந்தது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 12, 2025-க்குள் முழு பட்டாலியனும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தது.

    இந்தத் தாமதம் திரிபுரா, குவஹாத்தி, மிசோரம் மற்றும் கச்சார் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 13 கம்பெனியை சேர்ந்த சுமார் 1,300 BSF வீரர்களைப் பாதித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரயில்வே பதிலளித்து, பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.

    சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் வீடியோக்களில் காணப்படும் சேதமடைந்த பெட்டிகள் பருவகால பராமரிப்புக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளால் தவறுதலாக அந்த பெட்டிகளில் வீரர்கள் ஏற்றப்பட்டதாகவும் ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

    கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக BSF அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
    • 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.

    நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.

    பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

    இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

    இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.

    இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் பயன்படுத்தப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து பல் நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் கூறினர்..

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்களில் காலை உணவில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரெயில்களில் மூன்று வேளையும் அசைவ உணவு வழங்கப்படுவதாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    • மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுகிறது.
    • இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்.
    • வந்தே பாரத் ரெயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம்.

    வந்தே பாரத் ரெயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே பாதுகாப்பு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அந்த அறிக்கையில், வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதி இலகுவாக இருப்பதால் மாடுகள் மோதினால் விபத்துக்கு வழிவகுக்கும் எனவும், மாடுகள் செல்லும் இடங்களை கண்டறிந்து சுரங்கப் பாதைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.

    இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை.

    வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என்று தெரிவித்துள்ளார். 

    • கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் மூத்த குடிமக்கள் கட்டண நிறுத்தப்பட்டது.
    • கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும்.

    புதுடெல்லி:

    ரெயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் இச்சலுகை நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு மேற்கண்ட மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி ரெயில்களில் பயணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக, 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரெயில்வேக்கு கிடைத்த கூடுதல் வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கேள்வி கேட்டார்.

    அதற்கு ரெயில்வே அமைச்சகத்தின்கீழ் உள்ள ரெயில்வே தகவல் சேவை மையம் பதில் அளித்துள்ளது.

    அதில், கடந்த 5 ஆண்டுகளில் 31 கோடியே 35 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயில்களில் பயணித்து இருப்பதாகவும், அவர்கள் மூலம் ரூ.20 ஆயிரத்து 133 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இது முழு கட்டணம் செலுத்தியதால் கிடைத்த தொகை. கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும். எனவே, கட்டண சலுகை ரத்து காரணமாக, கூடுதலாக ரூ.8 ஆயிரத்து 913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே தகவல் சேவை மையம் கூறியுள்ளது.

    • ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.
    • பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

     பீகாரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 வயது பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கியூல் ரெயில் நிலையத்தில் இறங்கும்படி வற்புறுத்தினார்.

    அதை நம்பி அவர் இறங்கியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று  அவர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று எட்டு பேர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று குற்றவாளிகளில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்றான்.
    • சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    தெலுங்கானாவில் ஓடும் ரெயில் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரெயில் வந்துகொண்டுருந்தபோது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

    சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.
    • விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

    • கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

    உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

    ×