என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வருவாய்"

    • மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
    • போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

    மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.

    மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.

    இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.

    போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.

    இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.   

    • பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட தற்போதைய வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

    முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு 6,181 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகி உள்ளது.

    முன்பதிவு பயணிகள் பிரிவில் வருவாய் ரூ.42,945 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48 சதவீதம் அதிகம் ஆகும்.

    முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை சுமார் 45,180 லட்சமாகும். கடந்த ஆண்டு இது 19,785 லட்சமாக இருந்தது.

    வருவாயைப் பொறுத்தவரை ரூ.11,788 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,555 கோடிதான் கிடைத்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முன்பதிவு அல்லாத பிரிவில் 4 மடங்குக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    ×